பொது செய்தி

தமிழ்நாடு

மாணவர்களின் குடும்பத்துக்கு தலைமையாசிரியர் உதவிக்கரம்

Added : மே 19, 2020
Share
Advertisement
 மாணவர்களின் குடும்பத்துக்கு தலைமையாசிரியர் உதவிக்கரம்

வால்பாறை:ஊரடங்கால் பாதிக்கப்பட்ட, எஸ்டேட் தொழிலாளர்களின் குடும்பத்துக்கு, பள்ளி தலைமை ஆசிரியர் நிவாரண பொருட்கள் வழங்கினார்.வால்பாறை அடுத்துள்ள நல்லகாத்து எஸ்டேட் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில், தலைமை ஆசிரியராக ரஞ்சித்குமார் பணியாற்றுகிறார். கொரோனா தடுப்பு நடவடிக்கையாலும், ஊரடங்கு நீட்டிப்பாலும் பள்ளி மாணவர்களின் பெற்றோர்கள் வருவாய் இன்றி சிரமப்படுவதை அறிந்துள்ளார்.மொத்தம், 370 மாணவர்களின் குடும்பங்களுக்கு, இரண்டு லட்சம் ரூபாய் மதிப்பிலான அரிசி, மளிகை பொருட்கள், குழந்தைகளுக்கான பழங்கள் உள்ளிட்ட நிவாரண பொருட்களை வழங்கினார். நிகழ்ச்சியில், தமிழக ஆசிரியர் கூட்டணியின் பொள்ளாச்சி கல்வி மாவட்ட தலைவர் ராஜா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X