பொது செய்தி

தமிழ்நாடு

பூஜாரிகளுக்கு நிவாரணம் வழங்க கோரிக்கை

Added : மே 19, 2020
Share
Advertisement

பொள்ளாச்சி:தமிழ்நாடு பூஜாரிகள் பேரவை, கோவை மாவட்ட தலைவர் ஜெகநாதன், செயலாளர் வரதராஜன், பொருளாளர் சுரேஷ்குமார் ஆகியோர் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையரிடம் கொடுத்த மனுவில், 'நலவாரியத்தில் உள்ளவர்களுக்கு மட்டுமே கொரோனா நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. நலவாரியத்தில், உறுப்பினராக இல்லாத, கிராம கோவில் பூஜாரிகள் நுாற்றுக்கணக்கில் இருந்தும், கணக்கெடுப்பு பணி நடக்கவில்லை.எனவே, தட்டுக்காணிக்கையை மட்டும் நம்பி வாழ்க்கை நடத்தும் பூஜாரிகளை கணக்கெடுத்து, நிவாரண உதவி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X