பொது செய்தி

தமிழ்நாடு

சூடுபிடிக்கும் தென்னை சீமாறு வர்த்தகம்

Added : மே 19, 2020
Share
Advertisement
 சூடுபிடிக்கும் தென்னை சீமாறு வர்த்தகம்

பொள்ளாச்சி:பொள்ளாச்சியில், தென்னை ஈக்கியில் தயாராகும் 'சீமாறு' உற்பத்தி தீவிரமடைந்துள்ளது.பொள்ளாச்சி தென்னை சார் உற்பத்தி பொருட்களுக்கு உலகளவில் முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக உள்ளது. அவற்றில், மகளிருக்கு வருவாய் ஈட்டி தரும் கைத்தொழிலாக சீமாறு உற்பத்தி உள்ளது.தென்னை ஓலைகளின் ஈக்கிகளை பதப்படுத்தி கட்டி கிராமப்பெண்கள் வருவாய் ஈட்டுகின்றனர். பெண்களிடம் கொள்முதல் செய்யப்படும் சீமாறுகளை, பாலீஷ் செய்து, நாடு முழுக்க அனுப்புகின்றனர். பொள்ளாச்சியில் உற்பத்தி செய்யப்படும் சீமாறு உயரமாக இருப்பதால், உயரமான உடல்வாகு கொண்ட வடமாநில பெண்களிடையே பலத்த வரவேற்பு உள்ளது.பஞ்சாப், ஹரியானா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில், பொள்ளாச்சியில் தயாராகும் தென்னை சீமாறு அதிகளவில் கொள்முதல் செய்யப்படுகிறது.கொரோனா ஊரடங்கால், உள் மாநில, வெளி மாநில போக்குவரத்து முடங்கி, சீமாறு வர்த்தகம் ஸ்தம்பித்தது. கிராம பெண்கள் உற்பத்தி செய்த சீமாறு, சிறு வியாபாரிகள் கொள்முதல் செய்து இருப்பு வைத்தனர்.இந்நிலையில், இரண்டு மாதங்களுக்கு பிறகு, ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு, சீமாறு கொள்முதலை பெரிய வியாபாரிகள் துவங்கியுள்ளனர். கிராமங்களில், பாலீஷ் செய்யப்படாத சீமாறு ஒரு கிலோ, 12 ரூபாய்க்கும்; பாலீஷ் செய்யப்பட்ட சீமாறு, 22 ரூபாய்க்கும் கொள்முதல் செய்யப்படுகிறது.நகரையொட்டி அமைந்துள்ள குடோன்களில் கைப்பிடி, கம்பிக்கட்டு உள்ளிட்ட மதிப்புக்கூட்டு வேலைகள் செய்து, வடமாநிலங்களுக்கு அனுப்புகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X