பொது செய்தி

இந்தியா

ஜூன் 1 ம் தேதி முதல் 200 ரயில்கள் இயக்கம் : மத்திய அமைச்சர் அறிவிப்பு

Added : மே 19, 2020
Share
Advertisement

புதுடில்லி: வரும் ஜூன் 1 ம் தேதி முதல் ஏ. சி இல்லாத 200 ரயில்கள் இயக்கப்படும் என மத்திய ரயில்வே துறை அமைச்சர் பியூஷ்கோயல் தெரிவித்து உள்ளார்.latest tamil news


இது குறித்து அவர் கூறி இருப்பதாவது: வரும் ஜூன் 1 ம் தேதி முதல் ஏ. சி இல்லாத 200 ரயில்கள் இயக்க ரயில்வே துறை திட்டமிட்டு உள்ளது.பயணங்களுக்கான முன்பதிவு ஆன்லைனில் மட்டுமே நடை பெறும். எந்தஒரு ரயில்நிலையத்திலும் டிக்கெட் விற்கப்படமாட்டாது. பயணிகள் டிக்கெட் வாங்குவதற்கு ரயில் நிலையத்திற்கு வரகூடாது. இந்த ரயில்களில் ஏ.சி அல்லாத இரண்டாம் வகுப்பு பெட்டிகள் இருக்கும். இதற்கான ஆன்லைன் விரைவில் துவங்கும். என டுவிட்டரில் பதிவிட்டு உள்ளார்.


Piyush Goyal ✔@PiyushGoyal श्रमिकों के लिये बड़ी राहत, आज के दिन लगभग 200 श्रमिक स्पेशल ट्रेन चल सकेंगी, और आगे चलकर ये संख्या बड़े पैमाने पर बढ़ पायेगी।
8,1489:00 PM - May 19, 2020Twitter Ads info and privacy 1,683 people are talking about this


இதனிடையே ரயில்கள் எந்தெந்த வழிகளில் இயக்கப்படும் என ே தெரிவிக்கவில்லை என்றாலும் சிறிய நகரங்கள் மற்றும் பெரிய நகரங்களை இணைக்கும் வகையில் அமையும் என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
மேலும் வெளி மாநில தொழிலாளர்களுக்காக இயக்கப்பட்டு வரும் ஷ்ராமிக் சிறப்பு ரயில்களில் பயணம் செய்ய முடியாதோருக்கு இந்த 200 ரயில்கள் உதவிகரமாக அமையும் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்து உள்ளது.


latest tamil news


முன்னதாக ரயில்வே நிர்வாகம் ஜூன் 30 ம் தேதி வரையில் பயணிகள் சேவையை ரத்து செய்திருந்தது.

Advertisement
வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X