கொரோனா நோயாளிகளுக்கு மனநல பாதிப்பு: ஆய்வறிக்கை| Dinamalar

கொரோனா நோயாளிகளுக்கு மனநல பாதிப்பு: ஆய்வறிக்கை

Added : மே 19, 2020
Share

லண்டன் : கொரோனா நோயாளிகள், மன நல கோளாறுகளால் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக, லண்டன் பல்கலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து, அவர்கள், 'தி லான்செட் சைக்கியாட்ரி' இதழில் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை: கொரோனா நோயாளிகளில், நான்கில் ஒருவர், மனப் பிரமை பிரச்னைக்கு ஆளாகிறார். இது, வழக்கமாக, மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு ஏற்படுவது தான். எனினும், இந்த பிரச்னை, ஒருவரின் உயிரைப் பறிக்க அல்லது குணமடைவதை தாமதிக்க காரணமாக இருக்கிறது.கொரோனா சிகிச்சைக்குப் பின் குணமானோருக்கு, தீவிர மன அழுத்தம், மன உளைச்சல், பதற்றம் ஏற்படலாம் அல்லது ஏற்படாமலும் இருக்கலாம். அதே நேரத்தில், மனப் பிரமை, குழப்பம், ஞாபக மறதி பிரச்னைகளை கொரோனா நோயாளிகள் சந்திப்பது, ஆய்வில் தெரியவந்துள்ளது.கொரோனா நோயாளிகள் தனிமையில் வைக்கப்படுகின்றனர்.

அதுதான், அவர்களின் மனநல பாதிப்பிற்கு காரணமாக அமைகிறது. அதனால் அவர்கள், 'வீடியோ' மூலம் தங்கள் சுற்றத்தாரை காணவும், பேசவும் வசதி செய்தால், மன நலம் மேம்படும் சாத்தியக் கூறு உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X