ஆனைமலையில் கொப்பரை ஏலம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஆனைமலையில் கொப்பரை ஏலம்

Added : மே 19, 2020
Share

ஆனைமலை:ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில், எட்டு வாரங்களுக்கு பிறகு நேற்று, கொப்பரை ஏலம் நடந்தது.ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை கொப்பரை ஏலம் நடக்கிறது. ஊரடங்கு காரணமாக, எட்டு வாரங்களுக்கு பிறகு நேற்று, ஏலம் நடந்தது. ஒழுங்குமுறை விற்பனைக்கூட மேற்பார்வையாளர் மணிவாசகம் தலைமை வகித்தார். முதல் தர கொப்பரை, 368 மூட்டைகள் ஏலம் விடப்பட்டதில் கிலோவுக்கு, 88.75 முதல், 95.25 ரூபாய் விலை கிடைத்தது. இரண்டாம் தர கொப்பரை, 337 மூட்டைகள் ஏலம் விடப்பட்டதில் கிலோவுக்கு, 56 முதல், 61 ரூபாய் விலை நிர்ணயம் செய்யப்பட்டது. மொத்தம், 705 கொப்பரை மூட்டைகளை, 118 விவசாயிகள் கொண்டு வந்தனர், 13 வியாபாரிகள் ஏலத்தில் பங்கேற்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X