சென்னை : சட்டசபை தேர்தலுக்கு தயாராகும் வகையில், அ.தி.மு.க., தகவல் தொழில்நுட்ப பிரிவு, நான்கு மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.
தமிழக சட்டசபைக்கு, அடுத்த ஆண்டு தேர்தல் நடக்க உள்ளது. அதையொட்டி, தி.மு.க., தரப்பில், தேர்தல் வியூகம் அமைக்க, அரசியல் ஆலோசகராக, பிரசாந்த் கிஷோர் நியமிக்கப்பட்டு உள்ளார். சமாதானம்அதற்கு போட்டியாக, அ.தி.மு.க.,வின், தகவல் தொழில்நுட்ப அணியை தயார்படுத்தும் விதமாக, அதன் செயலர் உட்பட அனைத்து நிர்வாகிகளும், நேற்று அப்பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.
ஆனாலும், அதில் முக்கிய நிர்வாகிகளாக இருந்தவர்களை சமாதானப்படுத்த, நான்கு மண்டலங்களாக, தகவல் தொழில்நுட்ப அணியை பிரித்து, நான்கு மண்டல செயலர்களை நியமித்துள்ளனர். மற்ற நிர்வாகிகள் பட்டியல், பின்னர் அறிவிக்கப்படும் என, கட்சி ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் இ.பி.எஸ்., ஆகியோர் அறிவித்து உள்ளனர்.சென்னை மண்டல செயலராக, அஸ்பயர் சுவாமிநாதன்; வேலுார் மண்டல செயலராக, கோவை சத்யன்; கோவை மண்டல செயலராக, ராமச்சந்திரன்; மதுரை மண்டல செயலராக, ராஜ்சத்யன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஒவ்வொரு மண்டலத்திற்குள், எந்தெந்த மாவட்டங்கள் அடங்கும் என்ற விபரமும் அறிவிக்கப்பட்டு உள்ளது. கோவை மண்டல செயலர் ராமச்சந்திரன், துணை முதல்வர் ஆதரவாளர் என்பதால், தேனி, திண்டுக்கல் மாவட்டம், கோவை மண்டலத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. அதிகபட்சம்மதுரை மண்டல செயலர் ராஜ்சத்யன், முதல்வரின் ஆதரவாளர் என்பதால், சேலம், நாமக்கல், கரூர் மாவட்டங்கள், மதுரை மண்டலத்தில் சேர்க்கப்பட்டு உள்ளன. அவருக்கு அதிகபட்சமாக, 18 மாவட்டங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
கோவை மண்டலத்தில், 16 மாவட்டங்கள், வேலுார் மண்டலத்தில், 12 மாவட்டங்கள், சென்னை மண்டலத்தில், 10 மாவட்டங்கள் இடம் பெற்றுஉள்ளன.ஊராட்சி செயலர் பதவி ரத்து அ.தி.மு.க.,வில், ஊராட்சி செயலர் பொறுப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. 'ஊராட்சி செயலர்களாக பணியாற்றி வந்த அனைவருக்கும், விரைவில் மாற்று பொறுப்பு வழங்கப்படும்' என, கட்சிதலைமை அறிவித்துள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE