சம்பவம் செய்தி

தமிழ்நாடு

துாய்மை பணியாளர்கள் முற்றுகை போராட்டம்

Added : மே 19, 2020
Share
Advertisement
 துாய்மை பணியாளர்கள் முற்றுகை போராட்டம்

மடத்துக்குளம்:முழுமையான சம்பளம் வழங்கக்கோரி, மடத்துக்குளம் பேரூராட்சி அலுவலகத்தை துாய்மைப்பணியாளர்கள் முற்றுகையிட்டு, போராட்டம் நடத்தினர்.மடத்துக்குளம் பேரூராட்சியில், 15 வார்டுகள் உள்ளன. இங்கு, 35 துாய்மைப் பணியாளர்கள் தினக்கூலிகளாக பணியில் உள்ளனர்.இவர்களை ஒப்பந்த அடிப்படையில் தனியார் கட்டுப்பாட்டில் பணியாற்றும் படியான செயல்பாடு நடந்ததது. இதோடு, முழுமையான சம்பளம் வழங்கப்படவில்லை.
இதற்கு அதிருப்தி தெரிவித்த பணியாளர்கள், நேற்று காலை பேரூராட்சி அலுவலகத்தில் அமர்ந்து முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.போராட்டத்தில் ஈடுபட்ட துாய்மைப்பணியாளர்கள கூறுகையில், 'பத்து ஆண்டுகளாக பேரூராட்சி பகுதியில் துாய்மைப்பணியில் ஈடுபட்டு வருகிறோம். தற்போது, எங்களை தனியார் கட்டுப்பாட்டில் பணியாற்றும்படி பேரூராட்சி நிர்வாகத்தினர் ஒப்பந்தத்திற்கு ஏற்பாடு செய்துள்ளனர். இது எங்கள் வாழ்வாதாரத்தை பாதிக்கும்.இதோடு, எங்களுக்கு அரசு நிர்ணயித்த ஊதியம், ஒரு நபருக்கு, 420 ரூபாய் ஆகும். 35 பணியாளர்களுக்கும் இதே சம்பளம் தான் வழங்க வேண்டும். ஆனால், தினமும் ஒரு நபருக்கு 286 ரூபாய் மட்டுமே வழங்கப்படுகிறது.பாக்கி உள்ள 134 ரூபாய் எங்களுக்கு கிடைப்பது இல்லை.
இந்தப் பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும் வரை எங்கள் போராட்டம் தொடரும்' என்றனர்.சிறிது நேரத்துக்கு பின்பு அங்கு வந்த செயல் அலுவலர் ருக்குமணி தலைமையில், சமரச கூட்டம் நடந்தது. இதில், இன்ஸ்பெக்டர் ராஜகண்ணன் மற்றும் அ.தி.மு.க,, தி.மு.க.,, மா.கம்யூ., தொழிற்சங்கத்தினர் மற்றும் துாய்மைப்பணியாளர்கள் பங்கேற்றனர்.அதில் பேசிய செயல் அலுவலர், 'துப்புரவு பணியை தனியார் வசம் ஒப்படைக்கும் ஒப்பந்த முறை ரத்து செய்யப்பட்டது. சம்பளம் குறைவாக வழங்குவது குறித்து விசாரிக்கப்படும். அதனைத்தொடர்ந்து முழுமையான சம்பளம் வழங்க நிர்வாகம் மூலம் ஏற்பாடுகள் செய்யப்படும்,'' என்றார்.இதற்குப்பின் துாய்மைப்பணியாளர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X