அரபு எமிரேட்சில் கொரோனா பணியில் இந்திய செவிலியர்கள்

Added : மே 19, 2020
Share
Advertisement

துபாய் : மேற்கு ஆசிய நாடான ஐக்கிய அரபு எமிரேட்சில், கொரோனா வைரசை கட்டுப்படுத்தும் பணியில், இந்திய செவிலியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

சீனாவில் துவங்கிய கொரோனா வைரஸ், இப்போது, உலகம் எங்கும் பரவி அச்சுறுத்தி வருகிறது. ஐக்கிய அரபு எமிரேட்சிலும், கொரோனாவின் தாக்கம் அதிகமாகியுள்ளது. வைரசால் பாதிக்கப்பட்டவர்கள், மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். ஆனால், அவர்களை கவனித்துக் கொள்ள, அங்கு போதிய செவிலியர்கள் இல்லை. இதையடுத்து, கேரளா, கர்நாடகா, மஹாராஷ்டிரா மாநிலங்களைச் சேர்ந்த, 88 ஆண், பெண் செவிலியர் குழு, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் சென்றுள்ளது.

அவர்கள், அங்குள்ள மருத்துவனைகளில், கொரோனா நோயாளிகளை கவனிக்கும் பணியிலும், வைரஸ் தடுப்பு பணியிலும் ஈடுபட்டுஉள்ளனர். இவர்களை, துபாய் சுகாதார ஆணையம் பணியில் அமர்த்தியுள்ளது. இவர்கள் அங்கு, மூன்று மாதம் முதல், ஆறு மாதம் வரை பணியாற்றுவர் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X