அரசியல் செய்தி

தமிழ்நாடு

'வெளிநாட்டு தமிழர்களை மீட்க வேண்டும்'

Added : மே 19, 2020
Share
Advertisement
சென்னை : 'வெளிநாடுகளில் துன்பங்களை அனுபவிக்கிற தமிழர்களை மீட்க வேண்டியது, அரசின் கடமை' என, தி.மு.க., மகளிரணி செயலர் கனிமொழி தெரிவித்துள்ளார். 'டுவிட்டர்' பக்கத்தில், அவர் கூறியிருப்பதாவது:வெளிநாடுகளில் சிக்கி தவிக்கும் இந்தியர்களை மீட்டு வருவதற்காக, மத்திய அரசால் இயக்கப்படும் விமானங்கள், தமிழகத்திற்குள் வருவதை, முதல்வர் விரும்பவில்லை. மற்ற மாநிலங்களுக்கு

சென்னை : 'வெளிநாடுகளில் துன்பங்களை அனுபவிக்கிற தமிழர்களை மீட்க வேண்டியது, அரசின் கடமை' என, தி.மு.க., மகளிரணி செயலர் கனிமொழி தெரிவித்துள்ளார்.

'டுவிட்டர்' பக்கத்தில், அவர் கூறியிருப்பதாவது:வெளிநாடுகளில் சிக்கி தவிக்கும் இந்தியர்களை மீட்டு வருவதற்காக, மத்திய அரசால் இயக்கப்படும் விமானங்கள், தமிழகத்திற்குள் வருவதை, முதல்வர் விரும்பவில்லை. மற்ற மாநிலங்களுக்கு இயக்கப்படும் விமானங்களில், தமிழர்கள் அழைத்து வரப்பட்டாலும், போக்கு வரத்து இல்லாத சூழலில், அவர்களால் தமிழகம் திரும்ப முடிய வில்லை. அவர்கள் படும் துன்பங்களை, முதல்வர் அறிவாரா?மற்ற மாநிலங்களின் முதல்வர்கள், தங்கள் மக்களை மீட்டு வந்து, பரிசோதனை செய்தல், தனிமைப்படுத்துதல் என, ஆக்கப்பூர்வமாக செயல்படுகின்றனர்.

வெளிநாடுகளில் தமிழர்கள், கையில் பணமின்றி, பல்வேறு துன்பங்களை அனுபவிக்கின்றனர். அவர்களை தமிழகம் மீட்டு வர வேண்டியது, அரசின் கடமை.இவ்வாறு, கனிமொழி கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X