பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனா கேள்வி பதில் ஆன்லைனில் போட்டி

Added : மே 19, 2020
Share
Advertisement

உடுமலை:'கொரோனா' தடுப்பு நடவடிக்கைகள் குறித்து, ஆன்லைனில் விழிப்புணர்வு கேள்வி பதில் போட்டியை, உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ளது.சர்வதேச அளவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது 'கொரோனா' வைரஸ். தமிழகத்தில் பல மாவட்டங்களில் கட்டுப்பாட்டுக்குள் வந்திருந்தாலும், முன்னெச்சரிக்கையுடன் இருப்பது அவசியமாகியுள்ளது. தன்னார்வல அமைப்புகள் மற்றும் அரசின் மூலமும் தொடர்ந்து, பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்ற அறிவுறுத்தப்படுகிறது.உலக சுகதார அமைப்பின் சார்பில் ஒவ்வொரு நாளும், இந்த வைரஸ் தொடர்பான தகவல்களை தொடர்ந்து வெளியிட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக, கைகளை சுத்தமாக கழுவுதல், வீடு மற்றும் சுற்றுப்புறத்தை துாய்மையாக வைத்துக்கொள்ளுதல், உள்ளிட்ட கருத்துகளை பொதுமக்களிடம் கொண்டு சேர்க்க, 'ஆன்லைனில்' கேள்வி பதில் போட்டி நடத்துகிறது.பள்ளி மற்றும் கல்லுாரி மாணவர்கள், பொதுமக்கள், http://openwho.org என்ற இணையதளத்தில் பதிவு செய்து, போட்டியில் பங்கேற்கலாம். 'கொரோனா' வைரஸ் தொடர்பான தகவல்கள், பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த வினாக்கள் கேட்கப்படுகிறது. விடை அளிக்கும் போட்டியாளர்களுக்கு, சான்றிதழ்களும் வழங்கப்படுகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X