பொது செய்தி

தமிழ்நாடு

கொணலூர் கிராமத்தில் உதவிப் பொருட்கள் வழங்கல்

Added : மே 19, 2020
Share
Advertisement

செஞ்சி; கொணலுார் ஊராட்சியில் பொதுமக்களுக்கு விழுப்புரம் வடக்கு மாவட்ட தி.மு.க., வினர் உதவி பொருட்களை வழங்கினார்.செஞ்சி அடுத்த கொணலூர் ஊராட்சியில் கோயம்பேட்டில் இருந்து வந்த 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால் கிராம எல்லைகள் 20 நாட்களுக்கும் மேலாக மூடப்பட்டிருந்தன. தற்போது கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளது.இந்த கிராமத்தைச் சேர்ந்த 300 குடும்பங்களுக்கு விழுப்புரம் வடக்கு மாவட்ட தி.மு.க., சார்பில் அரிசி, மளிகை, காய்கறி, முக கவசம் ஆகியவற்றை மாவட்ட செயலாளர் மஸ்தான் எம்.எல்.ஏ., வழங்கினார்.ஒன்றிய செயலாளர் விஜயகுமார் தலைமை தாங்கினார். அனந்தபுரம் நகர செயலாளர் கல்யாணகுமார், மாவட்ட பிரதிநிதி ரவி, ஒன்றிய துணைச் செயலாளர் குமார், ஊராட்சி செயலாளர்கள் பிச்சாண்டி, நாகராஜன் மகளிரணி கற்பகம், கிளை நிர்வாகிகள் சேகர், பாபு உட்பட பலர் உடன் இருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X