பொது செய்தி

தமிழ்நாடு

தக்கல் முறையில் கூடுதல் மின் பளு வழங்க மின்வாரியம் அறிவிப்பு

Added : மே 19, 2020
Share
Advertisement

திருக்கோவிலுார்; திருக்கோவிலுார் கோட்டத்திற்குட்பட்ட விவசாயிகள் தங்கள் விவசாய மின் இணைப்பில் கூடுதல் மின்பளு வேண்டுவோர் விண்ணப்பிக்கலாம் என மின்வாரிய செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.திருக்கோவிலுார் கோட்டத்திற்குட்பட்ட விவசாயிகள் தங்கள் விவசாய மின் இணைப்பில் கூடுதல் பளு தேவைப்பட்டால் விண்ணப்ப கடிதத்தை திருக்கோவிலுார் செயற்பொறியாளர், மின்வாரிய அலுவலகத்தில் அளிக்க வேண்டும்.அத்துடன் மின்பளுவுக்கான ஒருமுறை செலுத்தும் கட்டணத்தை 30 நாட்களுக்குள் செலுத்த சம்மத கடிதம் வழங்க வேண்டும்.இதனை ஜூன் 30ம் தேதிக்குள் திருக்கோவிலுார் செயற்பொறியாளர் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட மின்பளுவுடன் சேர்த்து மொத்தம் 15 எச்.பி.,க்கு மிகாமல் இருக்க வேண்டும்.இதற்கான அறிவிப்பு கடிதம் பதிவு தபாலில் வந்தவுடன் பெயர் மாற்றம் தேவைப்படாத மின் நுகர்வோர் மோட்டார் மற்றும் கெப்பாசிட்டர் விவரங்களை அந்தந்த பிரிவு அலுவலகத்தில் நேரடியாக அளித்து புதிய விவசாய விண்ணப்பம் பதிவு மற்றும் செயல்பாட்டு கட்டணம் செலுத்தி பதிவு செய்ய வேண்டும்.பெயர் மாற்றம் தேவைப்படும் மின் நுகர்வோர் திருக்கோவிலுார் செயற்பொறியாளர் அலுவலகத்தை அணுகி உரிய ஆவணங்களை அளித்து 300 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும். பெயர் மாற்றம் செய்து, அனுமதி பெற்றவுடன் மோட்டார் மற்றும் கெப்பாசிட்டர் விவரங்களை அந்தந்த பிரிவு அலுவலகத்தில் நேரடியாக அளித்து புதிய விண்ணப்பம் பதிவு மற்றும் செயல்பாட்டு கட்டணமாக 100 ரூபாய் மற்றும் ஜி.எஸ்.டி., கட்டணமாக 18 ரூபாய் செலுத்தி பதிவு செய்யலாம்.கூடுதல் மின் பதிவுக்கான கட்டணம் செலுத்தி, தயார்நிலை பதிவு செய்ததன் அடிப்படையில் மின் இணைப்பிற்கு கூடுதல் மின்பளு வழங்கப்படும். இத்தகவலை திருக்கோவிலுார் செயற்பொறியாளர் ராஜாராம் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X