அரசு மருத்துவமனை முன் அவலம்| Dinamalar

அரசு மருத்துவமனை முன் அவலம்

Added : மே 19, 2020
Share

கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சி அரசு மாவட்ட மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை நுழைவு வாயில் பகுதியில் வாகனங்களின் அணிவகுப்பால் ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்கள் உள்ளே செல்ல முடியாமலும், நோயாளிகளும் பாதிப்பிற்குள்ளாகின்றனர்.அரசு மருத்துவமனை முன் மகப்பேறு மற்றும் குழந்தைகள் நல பிரிவுக்குச் செல்லும் கள்ளக்குறிச்சி அரசு மாவட்ட மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் கொரோனா சிறப்பு தனிமைப்படுத்தப்பட்ட வார்டு துவக்கப்பட்டது.இதனால் மருத்துவமனையின் மகப்பேறு, குழந்தைகள் நலம் உள்ளிட்ட மற்ற பிரிவுகளுக்கு என தனி வழி ஏற்படுத்தப்பட்டது. இந்த வழியாக தினமும் 1000க்கும் மேற்பட்ட மக்கள் வந்து செல்கின்றனர்.அத்துடன் ஆம்புலன்ஸ்களும் சென்று வருகின்றன. ஆனால், இந்த நுழைவுவாயிலின் முன்பாக தேவையற்ற தள்ளு வண்டி கடைகள், பைக்குகள் வரிசையாக நுழைவு வாயிலையும் அடைத்தவாறு நிறுத்தியுள்ளனர். இதனால் மருத்துவமனைக்கு வந்து செல்லும் நோயாளிகள் மற்றும் ஆம்புலன்ஸ்கள் வழியின்றி தவிக்கும் நிலை இருந்து வருகிறது. இதனால் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வரும் நோயாளிகள் பெரிதும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர்.எனவே மாவட்ட நிர்வாகம் கள்ளக்குறிச்சி அரசு மாவட்ட மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்களை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X