சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கொரோனா பாதிப்பு சென்னையில் தொடர்ந்து அதிகரிப்பு

Added : மே 19, 2020
Share
Advertisement

சென்னை : தமிழகத்தில், கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, 12 ஆயிரத்து, 448 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில், 4,895 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை, 84 பேர் உயிரிழந்துள்ளனர்.

சுகாதாரத் துறை செய்தி குறிப்பு: தமிழகத்தில், வெறும் அறிகுறியுடன், 4,775 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தொற்று உறுதி செய்யப்பட்டு, 7,469 பேர், மருத்துவமனைகளில் உள்ளனர். நேற்று மட்டும், 10 ஆயிரத்து, 333 பேருக்கு, பரிசோதனை செய்யப்பட்டு, 688 பேருக்கு, கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில், தமிழகத்தில் வசிப்பவர்கள், 601 பேர்; துபாய், மலேஷியா, குவைத் நாடுகளில் இருந்து திரும்பியவர்கள், 37 பேர்; மஹாராஷ்டிரா, கேரளா மாநிலங்களில் இருந்து வந்தவர்கள், 50 பேர். சென்னையில் மட்டும், நேற்று, 552 பேருக்கு தொற்று கண்டறிப்பட்டுள்ளது. செங்கல்பட்டு, 22; திருவள்ளூர், 8 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதுவரை, 3.32 லட்சம் மாதிரிகளை பரிசோதனை செய்ததில், 12 ஆயிரத்து, 448 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், சென்னையில் மட்டும், 7,672 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதற்கு அடுத்தபடியாக, திருவள்ளூர் மாவட்டம், 571; செங்கல்பட்டு மாவட்டத்தில், 560 பேர் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். சிகிச்சை முடிந்து, நேற்று மட்டும், 489 பேர் வீடு திரும்பினர். இதுவரை, 4,895 பேர் குணமடைந்து வீடு திரும்பிஉள்ளனர். சென்னை, ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த, திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த, 64 வயது நபர், சென்னையை சேர்ந்த, 72 வயது மற்றும், 82 வயது நபர் ஆகியோர், நேற்று முன்தினம் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.

இதன் வாயிலாக, பலிஆனோர் எண்ணிக்கை, 84 அதிகரித்துள்ளது. வீடுகள்தோறும் பரிசோதனைசென்னையில் நோய் பரவல் அதிகம் உள்ள, கட்டுப்பாட்டு பகுதி மக்களுக்காக, 'நம்ம சென்னை - கொரோனா விரட்டும் திட்டம்' செயல்படுத்தப்பட்டு உள்ளது. இதன்படி, சென்னையில் அறிகுறி மற்றும் பாதிப்பு ஏற்பட்ட பகுதி மக்களுக்கு, ரத்த மாதிரிகள், வீடுகளுக்கே சென்று எடுக்கப்படும். ராதாகிருஷ்ணன், கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி, சென்னை.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X