சமாஜ்வாதி கட்சி பிரமுகர் மகனுடன் சுட்டுக் கொலை

Added : மே 19, 2020
Share
Advertisement

சம்பல் : உ.பி.,யின் சம்பல் மாவட்டத்தில், சமாஜ்வாதி கட்சி பிரமுகர், அவரது மகன் ஆகியோரை, மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர்.

உ.பி.,யில், முதல்வர், யோகி ஆதித்யநாத் தலைமையில், பா.ஜ., ஆட்சி நடைபெறுகிறது. இம்மாநிலத்தின் சம்பல் மாவட்டத்தில், கிராம மேம்பாட்டு திட்டத்தின் கீழ் சாலை பணிகளை மேற்கொள்வதில், சமாஜ்வாதி கட்சி நிர்வாகி சோட்டேலால் திவாகர், 50, என்பவருக்கும், மற்றொரு தரப்பினருக்கும் இடையே, பிரச்னை ஏற்பட்டதாக தெரிகிறது.இந்நிலையில், அங்குள்ள ஷாம்ஷோய் கிராமத்தில், சோட்டேலால், அவரது மகன் சுனில் குமார், 28, ஆகியோர் நேற்று, மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இது தொடர்பாக, பஹ்ஜாய் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த படுகொலைக்கு, சமாஜ்வாதி கட்சியின் முன்னாள், எம்.பி., தர்மேந்திர யாதவ், கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X