ரஷ்யா, பிரேசிலில் தீவிரமடையும் வைரஸ்

Added : மே 19, 2020
Share
Advertisement

மாஸ்கோ : பல்வேறு ஆசிய, ஐரோப்பிய நாடுகளில், 'கொரோனா' வைரஸ் பாதிப்பு கட்டுப்படுத்தப் பட்டுள்ள நிலையில், ரஷ்யா மற்றும் தென் அமெரிக்க நாடான பிரேசிலில், பாதிப்பு திடீரென உயர்ந்துள்ளது, மருத்துவ நிபுணர் களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.

உலகெங்கும், கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, 49 லட்சத்து, 20 ஆயிரத்து, 500 ஆக உயர்ந்துள்ளது. மொத்த பலி, மூன்று லட்சத்து, 675 ஆக உள்ளது.அதிக தொற்று மற்றும் பலியில், அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. அங்கு, 15 லட்சத்து, 50 ஆயிரத்து, 699 பேருக்கு தொற்று உள்ளது. அதில், 92 ஆயிரத்து, 36 பேர் உயிரிழந்துள்ளனர். ஐரோப்பிய நாடுகளான இத்தாலி, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி ஆகியவை, அதற்கடுத்த இடங்களில் இருந்து வந்தன. இந்நிலையில், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து, இரண்டாவது இடத்தில் ரஷ்யா உள்ளது.

அங்கு, 2 லட்சத்து, 99 ஆயிரத்து, 941 பேருக்கு வைரஸ் தொற்று உள்ளது. அதே நேரத்தில், பலி எண்ணிக்கை, 2,837ஆக உள்ளது.பாதிக்கப்பட்டோரில் பாதி பேர், மாஸ்கோவாசிகள். அதற்கடுத்த மிகப் பெரிய நகரான, செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் அதிக பாதிப்பு உள்ளது.அதிர்ச்சிஇந்நிலையில், ௨ லட்சத்து, 55 ஆயிரத்து, 368 பேருக்கு பாதிப்புடன், நான்காவது இடத்தில், பிரேசில் உள்ளது. அங்கு, 16 ஆயிரத்து, 853 பேர் உயிரிழந்து உள்ளனர்.பல அமெரிக்க மாகாணங்கள், சில ஆசிய மற்றும் ஐரோப்பிய நாடுகளில், வைரஸ் பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

ஆனால், ரஷ்யா மற்றும் பிரேசிலில் திடீரென பாதிப்பு உயர்ந்து வருவது, மருத்துவத் துறையினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.இது, வைரஸ், தன் வீரியத்தை இழக்காமல், ஒவ்வொரு பகுதியாக, தீவிரமாக தாக்கி வருவதையே உணர்த்துவதாக, மருத்துவ நிபுணர்கள் கூறியுள்ளனர்.மேற்காசிய நாடான ஈரானில், கடந்த மாதத்தில், வைரஸ் பாதிப்பு படிப்படியாக குறைந்து வந்தது. இந்த மாதத்தில், அது மீண்டும் தீவிரமடைந்துள்ளது.எதிர்பார்ப்புஅதனால், இந்த வைரசின் உண்மையான குணத்தை புரிந்து கொள்ள முடியாமல், மருத்துவத் துறையினரே திண்டாடும் நிலை உள்ளது.

இந்த வைரசுக்கு, புதிய தடுப்பூசி கண்டுபிடிப்பதில் புதிய முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக பல்வேறு நாடுகள் கூறியுள்ளன. இது, புதிய நம்பிக்கையை மற்றும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.கொரோனா அச்சம் ஒரு பக்கம் இருந்தபோதும், பல்வேறு நாடுகளில், ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன. அதையடுத்து, தொழில்கள் மீண்டும் இயங்கத் துவங்கியுள்ளன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X