இந்தியா

விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

Added : மே 19, 2020
Share
Advertisement

காட்டேரிக்குப்பம்; மின்துறை தனியார் மயமாக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து சந்தைபுதுக்குப்பத்தில் விவசாயிகள் கருப்புக்கொடியுடன் நெல் வயலில் இறங்கி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.புதுச்சேரி உள்ளிட்ட 7 யூனியன் பிரதேசங்களில் மின்துறை தனியார் மயமாக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சந்தைபுதுக்குப்பம் கிராம விவசாயிகள் சங்கத் தலைவர் செந்தில்குமார் தலைமையில் நேற்று வயலில் இறங்கி கருப்பு கொடியுடன் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.இது குறித்து விவசாயிகள் கூறுகையில், மத்திய அரசு மின்துறையை தனியார் மயமாக்க முடிவு செய்துள்ளதால், விவசாயிகளுக்கான இலவச மின்சாரம் ரத்தாகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.ஏற்கனவே பல்வேறு காரணங்களினால், விவசாயத்தில் லாபம் இல்லாத சூழலில், இலவச மின்சாரம் ரத்தானால் விவசாயிகளின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கும் அபாயம் உள்ளது.ஆகையால், மத்திய அரசு மின்துறையை தனியார் மயமாக்கும் முடிவை உடனடியாக கைவிட வேண்டும் என கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X