இந்தியா

விவசாய தொழிலாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

Added : மே 19, 2020
Share
Advertisement

திருக்கனுார்;மத்திய, மாநில அரசுகளை கண்டித்து சந்தை புதுக்குப்பத்தில் விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.ஆர்ப்பாட்டத்திற்கு, சங்க மாநில ஒருங்கிணைப்பாளர் அருள் தலைமை தாங்கினார். சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.ஆர்ப்பாட்டத்தில் விவசாயத் தொழிலாளர் குடும்பங்களுக்கு நிவாரணமாக ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும். ரேஷன் கார்டு இல்லாதவர்களுக்கும் இலவச அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை வழங்கிட வேண்டும். முதியோர், விதவைகள், ஆதரவற்றோர், மாற்றுத் திறனாளிகளுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும். மத்திய அரசின் நுாறு நாள் வேலைத்திட்டத்தில் அட்டை பெற்றுள்ள அனைவருக்கும் பாகுபாடின்றி வேலை வழங்கிட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X