தனிமைப்படுத்தப்பட்ட 90 வீடுகள் விடுவிப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தனிமைப்படுத்தப்பட்ட 90 வீடுகள் விடுவிப்பு

Added : மே 19, 2020
Share

வால்பாறை:வால்பாறையில் தனிமைப்படுத்தப்பட்ட, 90 வீடுகள் விடுவிக்கப்பட்டன.கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, வெளிநாடு, வெளிமாநிலங்களில் இருந்து, வால்பாறை வந்தவர்களின் வீடுகளை சுகாதாரத்துறை அதிகாரிகள் கண்டறிந்து, அவர்களை தனிமைப்படுத்தினர்.அதேபோல், வால்பாறை நகர் மற்றும் எஸ்டேட் பகுதியில், 10 பேர் கொரோனா தொற்று காரணமாக கோவை மற்றும் பொள்ளாச்சி அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றனர்.வால்பாறை தாலுகாவில் மொத்தம், 185 வீடுகள் தனிமைப்படுத்தப்பட்டு, சுகாதாரத்துறை அதிகாரிகள் கண்காணித்து வந்தனர்.இந்நிலையில், 28 நாட்கள் முடிந்த, 90 வீடுகள் தனிமையிலிருந்து விடுவிக்கப்பட்டனர். மீதமுள்ள, 95 வீடுகளை சுகாதாரத்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X