சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மின் ஊழியருக்கு கொரோனா ; வாரிய அலுவலகத்திற்கு 'சீல்'

Added : மே 19, 2020
Share
Advertisement

சென்னை : ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானதால், மின் வாரிய தலைமை அலுவலக, நிர்வாக பிரிவு ஊழியர்கள் அனைவரும் வீட்டிற்கு அனுப்பப்பட்டு, அலுவலகத்திற்கு, 'சீல்' வைக்கப்பட்டது.

சென்னை, அண்ணா சாலையில், 10 மாடி கட்டடத்தில், மின் வாரிய தலைமை அலுவலகம் இயங்குகிறது. இந்த கட்டடத்தின் எட்டாவது மாடியில், நிர்வாக பிரிவுகள் செயல்பட்டு வருகின்றன. இந்தப் பிரிவு எப்போதும் பரபரப்பாக இருக்கும்.இந்நிலையில், நிர்வாக பிரிவில் பணிபுரியும் ஊழியர் ஒருவருக்கு, நேற்று கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. அவர், சில தினங்கள் முன் வரை, அலுவலகத்திற்கு வந்து உள்ளார். இதனால், நேற்று காலை, 12:00 மணிக்கு, எட்டாவது மாடிக்கு செல்லும், அனைத்து வழிகளும் பூட்டி, 'சீல்' வைக்கப்பட்டன.

அங்கு பணிபுரிந்த ஊழியர்கள் அனைவரும், நேற்று வீடுகளுக்கு செல்ல அனுமதிக்கப்பட்டனர். அப்போது, 'கொரோனா பாதிப்பிற்கு உள்ளான ஊழியர், ஒவ்வொரு மாடியாக கடந்து, தான் பணிபுரியும் எட்டாவது மாடிக்கு சென்றிருப்பார். 'இதனால், வைரஸ் பாதிப்பில் இருந்து, அனைவரையும் பாதுகாக்கும் வகையில், தலைமையகத்தில் உள்ள அனைத்து ஊழியர்களையும் வெளியேற்றி, கிருமி நாசினி தெளிக்க வேண்டும்' என, ஊழியர்கள் சிலர், தங்கள் பிரிவு உயரதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தனர்.
மாலையில், நிர்வாக பிரிவு முழுதும், கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. அடுத்த வாரம் வரை, அந்த பிரிவை மூடி வைக்கவும், அங்கு பணிபுரியும் ஊழியர்களுக்கு, வேறு பிரிவுகளில் இருக்கைகள் வழங்கவும், வாரிய அதிகாரிகள் முடிவு செய்து உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X