இந்தியா

திருக்கனூர் எல்லையில் எஸ்.பி., ஆய்வு

Added : மே 19, 2020
Share
Advertisement

திருக்கனுார்: திருக்கனுார் எல்லைப்பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து எஸ்.பி., ரட்சனா சிங் ஆய்வு செய்தார்.கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால், திருக்கனுார், மணலிப்பட்டு, மண்ணாடிப்பட்டு, கூனிச்சம்பட்டு கிராமங்கள் வழியாக தமிழக பகுதி மக்கள் புதுச்சேரி மாநிலத்திற்குள் வருவதை தடுக்க திருக்கனூர் போலீசார் தடுப்புகள் ஏற்படுத்தி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.இந்நிலையில், தமிழகத்தில் மதுபான கடைகள் திறக்கப்பட்டுள்ளதால், மதுபாட்டில்கள் புதுச்சேரிக்கு கடத்தி வருவதை தடுக்க சப் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் தலைமையில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.எல்லை பகுதி பாதுகாப்பு பணிகளை எஸ்.பி., ரட்சனா சிங் நேற்று பார்வையிட்டு, ஆய்வு செய்தார். இதில், அத்தியாவசிய தேவை இன்றி தமிழக பகுதி மக்களை புதுச்சேரிக்குள் அனுமதிக்க கூடாது என பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாரிடம் அறிவுறுத்தினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X