யானை நடமாட்டம் அதிகரிப்பு :தென்னைகள் சேதத்தால் கவலை

Added : மே 19, 2020
Share
Advertisement
ஆனைமலை:ஆனைமலை அடுத்த நரிக்கல்பதி, சர்க்கார்பதி பகுதிகளில், விளைநிலங்களில் புகுந்த காட்டு யானைகள், பயிர்களை சேதப்படுத்துவது அதிகரித்துள்ளது.ஆனைமலை அடுத்த நவமலை, ஆழியாறு, சேத்துமடை, சர்க்கார்பதி, அர்த்தநாரிபாளையம் பகுதிகளில் கடந்த, இரண்டு மாதங்களாக காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. கடந்த வாரம், சர்க்கார்பதியில் விளைநிலத்தினுள் புகுந்த ஒற்றை ஆண் காட்டு
 யானை நடமாட்டம் அதிகரிப்பு :தென்னைகள் சேதத்தால் கவலை

ஆனைமலை:ஆனைமலை அடுத்த நரிக்கல்பதி, சர்க்கார்பதி பகுதிகளில், விளைநிலங்களில் புகுந்த காட்டு யானைகள், பயிர்களை சேதப்படுத்துவது அதிகரித்துள்ளது.ஆனைமலை அடுத்த நவமலை, ஆழியாறு, சேத்துமடை, சர்க்கார்பதி, அர்த்தநாரிபாளையம் பகுதிகளில் கடந்த, இரண்டு மாதங்களாக காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. கடந்த வாரம், சர்க்கார்பதியில் விளைநிலத்தினுள் புகுந்த ஒற்றை ஆண் காட்டு யானை, தென்னை மரங்களை முட்டி சாய்த்து சேதப்படுத்தியது.
விரட்டச்சென்ற வனத்துறை வாகனத்தை தாக்கியது.அதேபோல், நரிக்கல்பதி சுற்றுப்பகுதிகளில் ஒரு வாரமாக, குட்டியுடன் வரும் பெண் யானை, தென்னை மரங்களை முட்டி சாய்த்து குருத்துப்பகுதியை சாப்பிட்டு சேதத்ததை ஏற்படுத்தி வருகிறது. மாங்காய் சாகுபடி செய்த தோப்புகளில் புகுந்து மரங்களை சேதப்படுத்தி வருகிறது.
இந்த யானைகள் நேற்று முன்தினம் நரிக்கல்பதி அருகே, மூன்று தென்னந்தோப்புகளுக்குள் புகுந்து, 25க்கும் மேற்பட்ட தென்னை மரங்களை சேதப்படுத்தி உள்ளது.வனத்தையொட்டிய பகுதிகளில் நாளுக்கு நாள் யானைகளின் நடமாட்டம் அதிகரித்து வருவதால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். வனத்துறையினர் யானையின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X