பொது செய்தி

தமிழ்நாடு

கட்டுப்படுத்தப்பட்ட மண்டலம் திறப்பால் மக்கள் மகிழ்ச்சி

Added : மே 19, 2020
Share
Advertisement
 கட்டுப்படுத்தப்பட்ட மண்டலம்  திறப்பால் மக்கள் மகிழ்ச்சி

உடுமலை:உடுமலை நகரில், மீதமிருந்த ஒரு கட்டுப்படுத்தப்பட்ட மண்டலமும் நேற்று திறக்கப்பட்டது.உடுமலையில், 'கொரோனா' தொற்று பாதித்த ஏழு பேர் குணமடைந்து வீடு திரும்பினர்; அவர்களது வீடுகள் இருந்த குடியிருப்புகள், கட்டுப்படுத்தப்பட்ட மண்டலமாக அறிவிக்கப்பட்டது.அப்பகுதியில், தடுப்புகள் அமைத்து, அடைக்கப்பட்டன. டாக்டர்கள் குழுவினர் தொடர் கண்காணிப்பு செய்தனர். பின்னர், படிப்படியாக ஒவ்வொரு மண்டலமும் திறக்கப்பட்டது.பள்ளிவாசல் வீதி, வி.வி., லே-அவுட், சங்கிலி வீதி, தளி ரோடு, மகபூப்கான் லே-அவுட், நெல்லுக்கடை வீதியும் திறக்கப்பட்டன. ஏப்., 23ல், அடைக்கப்பட்டிருந்த விநாயகர் கோவில் வீதியில் மட்டும் தொடர் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வந்தது.நேற்று விநாயகர் கோவில் வீதியும் சுகாதாரத்துறை அதிகாரிகள், முன்னிலையில் திறக்கப்பட்டது. உடுமலை நகரில், தற்போது, எவ்வித கட்டுப்படுத்தப்பட்ட மண்டலமும் இல்லை என அதிகாரிகள் தரப்பில் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X