பொது செய்தி

தமிழ்நாடு

பல்வேறு நாடுகளுக்கு தேங்காய் ஏற்றுமதி: சந்தை வாய்ப்புகளை அதிகரிக்க தீவிரம்

Added : மே 19, 2020
Share
Advertisement
 பல்வேறு நாடுகளுக்கு தேங்காய் ஏற்றுமதி: சந்தை வாய்ப்புகளை அதிகரிக்க தீவிரம்

உடுமலை:பல்வேறு நாடுகளுக்கு, தேங்காயை ஏற்றுமதி செய்து, சந்தை வாய்ப்புகளை அதிகரிக்கும் முனைப்பில், உடுமலை விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.உடுமலை பகுதியில், நிகர சாகுபடி பரப்பான, 22,100 எக்டரில், தென்னை, 11,300 எக்டரில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. குடிமங்கலம் பகுதியில், நிகர சாகுபடி பரப்பான, 36,100 எக்டரில், தென்னை சாகுபடி பரப்பு, 15,217 எக்டராக உள்ளது.
இவ்வாறு, பிரதானமான தென்னை சாகுபடியில், தேங்காய், கொப்பரை விலை வீழ்ச்சியால், பாதிப்பு தொடர்கிறது.கோடை காலம் துவங்கி, தேங்காய் உற்பத்தி அதிகரித்துள்ள நிலையில், கொப்பரை, தேங்காயின் விலை செயற்கையாக குறைக்கப்பட்டுள்ளதால், விவசாயிகள் அதிர்ச்சியில் உள்ளனர்.ஆண்டுதோறும் தொடர்கதையாக உள்ள இப்பிரச்னைக்கு, மாற்று வழிகளையும் விவசாயிகள் பின்பற்ற துவங்கியுள்ளனர். அதில், தேங்காயை கொப்பரையாக மதிப்பு கூட்டி இருப்பு வைத்தல்; ஏற்றுமதி செய்வதற்கான வாய்ப்புகளை உருவாக்குவது என விவசாயிகள் ஒருங்கிணைந்து செயலாற்றி வருகின்றனர்.அவ்வகையில், தேங்காயை தரம் பிரித்து, பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யத்துவங்கியுள்ளனர்.
தற்போது, தேங்காய் கிலோ, 26 ரூபாய் முதல் கொள்முதல் செய்யப்பட்டு, துபாய் போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதியாகிறது.மட்டைகளை உரித்து, எடை போட்டு, பிரத்யேகமான, பைகளில், தேங்காய்களை 'பேக்' செய்து, அனுப்புகின்றனர். இந்த ஏற்றுமதிக்கான வழிகாட்டுதல்களை, மத்திய, மாநில அரசுகள் வேளாண்துறை மூலம் வழங்கினால், தேங்காய்களுக்கான தேவை அதிகரிக்கும்.அதிக உற்பத்தி காலத்திலும், விலை வீழ்ச்சி அடையாமல், நிலையான விலை கிடைக்கும் என விவசாயிகள் தெரிவிக்கின்றனர். இதற்கான விவசாயிகளை உள்ளடக்கிய ஏற்றுமதியாளர்கள் குழுக்களை வட்டார வாரியாக உருவாக்கவும் வலியுறுத்தப்படுகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X