இந்தியா

மதுக்கடை திறக்க கவர்னர் அனுமதி கேட்பது ஏன்?

Added : மே 19, 2020
Share
Advertisement

புதுச்சேரி; மதுக்கடை திறப்பிற்கு கவர்னர் அனுமதியை முதல்வர் நாராயணசாமி எதற்காக கேட்கிறார் என அ.தி.மு.க. கேள்வி எழுப்பியுள்ளது.இதுகுறித்து அன்பழகன் எம்.எல்.ஏ., விடுத்துள்ள அறிக்கை;புதுச்சேரியில் நேற்று முன்தினம் நடந்த அமைச்சரவை கூட்டத்திற்கு பின்பு, காலை 7:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை மதுக்கடை திறக்கப்படும் என முதல்வர் அறிவித்தார். காலை 7:00 மணிக்கே மதுக்கடைகள் திறக்க வேண்டியதன் அவசியம் என்ன.தமிழகத்தில் மதுபான கடை திறப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் தி.மு.க., புதுச்சேரியில் காங்., அரசுக்கான ஆதரவை திரும்ப பெற்றுவிடுமா. தமிழகத்தில் மதுபான கடை திறப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் காங்., புதுச்சேரியில் ஆளும் காங்., அரசு மதுபான திறப்புக்கு சம்மதம் தெரிவிக்கிறது.புதுச்சேரியில் ஒட்டுமொத்த மதுபான உற்பத்தி மற்றும் மதுபான விற்பனையை தங்களது கட்சியைச் சேர்ந்தவர்கள் நடத்துவதால், தி.மு.க. தலைவர் ஸ்டாலின், காங்., தலைவர் அழகிரி ஆகியோரால், புதுச்சேரியில் கருப்பு சட்டை போராட்டம் நடத்த முடியவில்லை. தி.மு.க., காங்., கட்சியின் இரட்டை வேடத்தை மக்கள் புரிந்த கொள்ள வேண்டும்.அரசின் அன்றாட நிகழ்வில் கவர்னர் தலையிடக்கூடாது, அனைத்து அதிகாரங்களும் எங்களுக்குத்தான் இருக்கிறது, கவர்னர் உத்தரவை எந்த அதிகாரியும் மதிக்கக்கூடாது. மீறி நடக்கும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பேன் என தினந்தோறும் கூறும் முதல்வர் மதுக்கடை திறப்பிற்கு கவர்னரின் அனுமதியை எதற்காக கேட்கிறார். மதுக்கடை திறப்பது சம்பந்தமாக முதல்வரின் நிலைப்பாட்டில் தடுமாற்றம் ஏன். மின்துறையை தனியார் மயமாக்கும் மத்திய அரசின் அறிவிப்பை முதல்வர் உறுதியாக எதிர்க்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X