சம்பவம் செய்தி

தமிழ்நாடு

நார் தொழிற்சாலையில் மின் கசிவால் தீ விபத்து

Added : மே 19, 2020
Share
Advertisement
 நார் தொழிற்சாலையில் மின் கசிவால் தீ விபத்து

கிணத்துக்கடவு:கிணத்துக்கடவு அடுத்துள்ள கொண்டம்பட்டியில், தென்னை நார் தொழிற்சாலையில், மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது.கிணத்துக்கடவு அடுத்துள்ள தாமரைக்குளத்தை சேர்ந்தவர் தங்கமணி, 61, இவருக்கு, கொண்டம்பட்டியில் தென்னை நார் தொழிற்சாலை உள்ளது. தென்னை நார் தொழிற்சாலையில், நேற்று மதியம், 2:30 மணியளவில் மின்கசிவு காரணமாக நாரில் தீ பற்றியது.தீ விபத்து ஏற்பட்டதும், பணியில் இருந்த, 10 தொழிலாளர்கள் தொழிற்சாலையை விட்டு வெளியே வந்தனர். தகவல் அறிந்த, கிணத்துக்கடவு தீயணைப்புத்துறையினர் விரைந்து வந்து, இரண்டு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.கிணத்துக்கடவு மண்டல துணை தாசில்தார் சிவக்குமார், வருவாய் அலுவலர் ராமராஜ் ஆகியோர் நார் தொழிற்சாலையை பார்வையிட்டனர்.மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக தெரியவந்தது. இதில், பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள தென்னை நார் எரிந்து சேதமடைந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X