சோனியா தலைமையில் 22ல் எதிர்க்கட்சி கூட்டம்

Added : மே 19, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement

புதுடில்லி : ஊரடங்கால் தொழிலாளர்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்து விவாதிப்பதற்காக, வரும், 22ல், காங்கிரஸ் தலைவர் சோனியா தலைமையில் எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டம் நடக்கவுள்ளது.

கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக நாடு முழுதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதனால், நாட்டின் பல்வேறு பகுதிகளில் பணியாற்றி வந்த தொழிலாளர்கள், தங்கள் சொந்த மாநிலங்களுக்கு திரும்புவதில் பல்வேறு பிரச்னைகள் எழுந்துள்ளன. பல தொழிலாளர்கள் நடை பயணமாகவே செல்வதால், விபத்தில் சிக்கும் சம்பவங்களும் நடக்கின்றன. இந்நிலையில், இது குறித்து விவாதிப்பதற்காக, எதிர்க்கட்சி தலைவர்கள் பங்கேற்கும் கூட்டத்தை, காங்., தலைவர் சோனியா கூட்டியுள்ளார்.வரும், 22ல் நடக்கவுள்ள இந்த கூட்டத்தில், 17 கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்கவுள்ளதாகவும், இந்த கூட்டம், 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக நடக்கவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனாலும், முக்கிய எதிர்க்கட்சிகளான சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் ஆகிய கட்சிகளின் தலைவர்கள் இந்த கூட்டத்தில் பங்கேற்பது குறித்து, இதுவரை எந்த முடிவும் அறிவிக்க வில்லை. இதற்கிடையே, பா.ஜ., ஆட்சி நடக்கும் குஜராத், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில், வெளிநாட்டு முதலீட்டாளர்களை ஈர்க்கும் வகையில் தொழிலாளர் சட்டத்தை திருத்தியது குறித்தும், இந்த கூட்டத்தில் விவாதிக்கவுள்ளதாக, காங்., வட்டாரங்கள் தெரிவித்தன. இது குறித்து, கோல்கட்டாவில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய, மேற்கு வங்க முதல்வரும், திரிணமுல் காங்., தலைவருமான மம்தா பானர்ஜி,''தொழிலாளர் பிரச்னை குறித்து விவாதிப்பதற்காக நடக்கவுள்ள எதிர்க்கட்சி தலைவர்களின் கூட்டத்தில் நானும் பங்கேற்கவுள்ளேன்,'' என, கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
s.rajagopalan - chennai ,இந்தியா
20-மே-202013:10:07 IST Report Abuse
s.rajagopalan கூட்டம் நடக்கட்டும் ..ஆனால் ஒரு கண்டிஷன் ...வழக்கம்போல் மோடியின் குறைகளை அடுக்கி கூட்டத்தை முடிக்க கூடாது.
Rate this:
Cancel
R. Vidya Sagar - Chennai,இந்தியா
20-மே-202011:31:53 IST Report Abuse
R. Vidya Sagar If it is a video conference, there is no samosa and so there is no attraction. What happened to the once self appointed kingmaker Naidugaru?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X