அரசியல் செய்தி

தமிழ்நாடு

சென்னையில் வீடு வீடாக கபசுர குடிநீர் வினியோகிக்கப்படும் ; அமைச்சர், விஜயபாஸ்கர்

Added : மே 19, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
 சென்னையில் வீடு வீடாக கபசுர குடிநீர் வினியோகிக்கப்படும் ; அமைச்சர், விஜயபாஸ்கர்

சென்னை : ''சென்னையில், நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில், 50 இருசக்கர வாகனங்களில், கபசுர குடிநீர் வினியோகிக்கப்படும்,'' என, சுகாதாரத் துறை அமைச்சர், விஜயபாஸ்கர் கூறினார்.

சென்னையில், கொரோனா பாதித்தவர்களுக்கு, அலோபதி மருத்துவத்துடன், சித்தா டாக்டர் வீரபாபு குழுவினர் தயாரித்த, மூலிகை கஷாயம், துாதுவளை சூப், நவதானிய சுண்டல் போன்றவை வழங்கப்பட்டன. அதற்கு நல்ல பலன் கிடைத்து, கொரோனா நோயாளிகள், விரைவாக குணமடைந்து வீடு திரும்பினர்.'வைட்டமின்'இதையடுத்து, பாதிப்பு அதிகமுள்ள, கோடம்பாக்கம் மண்டலத்தில் உள்ள, கட்டுப்பாட்டு பகுதி மக்களுக்கு, மூலிகை கஷாயம் வழங்கப்பட்டது. தற்போது இது, ராயபுரம் மண்டலத்திலும் தரப்பட்டு வருகிறது.

சென்னை, தலைமை செயலகம் அருகேயுள்ள, சத்தியவாணி முத்து நகர் பகுதிகளில் உள்ள மக்களுக்கு, அமைச்சர் விஜயபாஸ்கர், கபசுர குடிநீர், மூலிகை கஷாயம், 'வைட்டமின்' மாத்திரைகள் வழங்கினார். அப்போது, கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி, ராதாகிருஷ்ணன், சுகாதாரத்துறை செயலர், பீலா ராஜேஷ், மாநகராட்சி கமிஷனர், பிரகாஷ் மற்றும் மத்திய மருத்துவ குழுவினர் உடனிருந்தனர்.ஒத்துழைப்புஇதுகுறித்து, அமைச்சர் விஜயபாஸ்கர் அளித்த பேட்டி:சென்னையில், கொரோனாவை கட்டுப்படுத்த எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கை குறித்து, மத்திய குழுவினர் ஆய்வு செய்கின்றனர்.

சென்னையில், கொரோனாவை கட்டுப்படுத்துவது சவாலான ஒன்று. இதற்கு, பொது மக்களின் ஒத்துழைப்பு மிகவும் அவசியம். சென்னையில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டபோது, இந்திய மருத்துவ சிகிச்சையை பயன்படுத்தி, தொற்றுநோய் பரவாமல் தடுக்கப்பட்டது.தற்போது, கொரோனாவை கட்டுப்படுத்த, தலா, 50 கிராம் அளவில், 5.20 லட்சம் எண்ணிக்கையில், கபசுர பொட்டலங்கள், மாநகராட்சிக்கு வழங்கப்பட்டுள்ளன.மேலும், கட்டுப்பாட்டு பகுதிகளில், 50 இருசக்கர வாகனங்களில், கபசுர குடிநீர் வினியோகிக்கப்படும். இதற்கான பணிகளில், அரசு சித்தா டாக்டர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
நிலா - மதுரை,இந்தியா
20-மே-202007:23:57 IST Report Abuse
நிலா அடங்காத சென்னை அலப்பறை தமிழகம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X