பொது செய்தி

தமிழ்நாடு

மேற்கு புறவழிச்சாலைக்கு நிலம் எடுக்க ஆய்வு: ரூ. 45 கோடி நிதி ஒதுக்கீடு

Added : மே 19, 2020
Share
Advertisement
 மேற்கு புறவழிச்சாலைக்கு நிலம் எடுக்க ஆய்வு: ரூ. 45 கோடி நிதி ஒதுக்கீடு

பொள்ளாச்சி:பொள்ளாச்சியில், மேற்கு புறவழிச்சாலை திட்டத்துக்கு நிலம் எடுப்பு பணிக்காக, மாவட்ட வருவாய் அலுவலர் ஆய்வு மேற்கொண்டார்.பொள்ளாச்சி நகரில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது. நகரில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த நான்கு வழிச்சாலை திட்டம் செயல்படுத்துவதற்காக நிலம் கையகப்படுத்தப்பட்டு, பணிகள் விரைவில் துவங்கப்பட உள்ளது.உடுமலை மற்றும் கோவை ரோட்டை புறவழிச்சாலையாக இணைக்க, கிழக்கு புறவழிச்சாலை திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், மீன்கரை ரோடு, பாலக்காடு ரோடு, கோவை ரோடுகளை இணைக்கும், மேற்கு புறவழிச்சாலை திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. கேரளா மற்றும் ஆனைமலையில் இருந்து கோவைக்கு செல்லும் வாகனங்கள், பொள்ளாச்சி நகருக்குள் வராமல், கோவை ரோட்டை அடையும் வகையில், மேற்கு புறவழிச்சாலை அமைக்கப்படுகிறது.ஆ.சங்கம்பாளையம், ஆர்.பொன்னாபுரம், தாளாக்கரை, ஜமீன் முத்துார், ஜமீன் ஊத்துக்குளி வழியாக, இந்த புறவழிச்சாலை ஒன்பது கி.மீ.,க்கு அமைக்கப்படுகிறது.இதற்காக, நிலம் கையகப்படுத்த கடந்த மார்ச் மாதம் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதனை தொடர்ந்து, நேற்று மாவட்ட வருவாய் அலுவலர் ராமதுரை முருகன், சப் - கலெக்டர் வைத்திநாதன், தாசில்தார் தணிகைவேல் மற்றும் வருவாய்துறை, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.அதனை தொடர்ந்து, தாலுகா அலுவலகத்தில் கருத்து கேட்பு கூட்டம் நடந்தது. அதில், விவசாயிகள், பொதுமக்கள் கருத்து மற்றும் ஆட்சேபனை கேட்டறியப்பட்டது.பொதுமக்கள் கூறுகையில், 'ஆர். பொன்னாபுரம் பகுதியில், ரோடு விரிவாக்க போதுமான அரசு இடம் உள்ளது. ஆனால், அங்குள்ள வீடுகள், பள்ளி கூட கட்டடங்களை இடிக்கும் வகையில், திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.வீடுகளை இடிப்பதை தவிர்த்து, அரசு நிலத்தை பயன்படுத்தி ரோடு அமைக்க வேண்டும். தேவைப்பட்டால் விவசாய நிலங்களை கையகப்படுத்த வேண்டும்,' என்றனர். வருவாய்துறை அதிகாரிகள் கூறியதாவது:மேற்கு புறவழிச்சாலை திட்டத்தில், மூன்றரை மீட்டர் உள்ள ரோடு, 14 மீட்டருக்கு அகலப்படுத்தப்படுகிறது. இந்த பணிக்காக நிலம் கையகப்படுத்த வேண்டியுள்ளது.தனியார் நிலம், 32,224 சதுர மீட்டர்; அரசு நிலம், 54,545 சதுர மீட்டர் பரப்பளவுக்கு கையகப்படுத்த வேண்டும். இந்த திட்டத்துக்காக, 45 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தனியார் நிலங்கள் விவசாய நிலங்களாக உள்ளன. இந்த இடத்தை கையகப்படுத்துவது குறித்து விவசாயிகளிடம் கருத்து கேட்டறியப்பட்டுள்ளது.இவ்வாறு, அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X