பொது செய்தி

தமிழ்நாடு

வடமாநிலத்தவர்களிடம் போலீசார் சமரச பேச்சு

Added : மே 19, 2020
Share
Advertisement

பொள்ளாச்சி:பொள்ளாச்சி அருகே, சொந்த ஊருக்கு நடந்து செல்ல முயன்ற வடமாநில தொழிலாளர்களை போலீசார் சமரசம் செய்தனர்.பொள்ளாச்சி அருகே காமநாயக்கன்பாளையம் தனியார் காட்டன் மில்லில், 151 வடமாநில தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர். இவர்கள், நேற்றுமுன்தினம் சொந்த ஊரான ஜார்கண்ட் செல்வதற்காக நடைபயணமாக சென்றனர்.காமநாயக்கன்பாளையம் பஸ் ஸ்டாப் அருகே வந்த தொழிலாளர்களை, பொள்ளாச்சி போலீஸ் டி.எஸ்.பி., சிவக்குமார், இன்ஸ்பெக்டர் வெற்றிவேல் ராஜன், எஸ்.ஐ., மணிமாறன் மற்றும் போலீசார், தடுத்து பேச்சு நடத்தினர்.அப்போது, 'வடமாநில தொழிலாளர்கள் நடைபயணமாக செல்ல வேண்டாம்; சொந்த ஊருக்கு செல்ல அரசு ஏற்பாடு செய்து வருகிறது,' என போலீசார் உறுதியளித்தனர்.மேலும், அவர்கள் சொந்த ஊருக்கு செல்ல பதிவு செய்யப்பட்டது. இதனையடுத்து, அவர்கள் பணியாற்றும் தனியார் நிறுவன வளாகத்தில் தங்க வைக்கப்பட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X