பொது செய்தி

தமிழ்நாடு

மானிய விலை ஸ்கூட்டர்: பயனாளிகளுக்கு அறிவிப்பு: பயனாளிகளுக்கு அறிவிப்பு

Added : மே 20, 2020
Share
Advertisement

உடுமலை:மானிய விலை ஸ்கூட்டர் திட்டத்தில் பதிவு செய்த தகுதியுள்ள பயனாளிகள், உள்ளாட்சி நிர்வாகங்களில், மானியத்தொகை பெறுவதற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.பணிக்கு செல்லும், பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள பெண்களுக்கு உதவும் வகையில், அரசின் சார்பில் மானிய விலை ஸ்கூட்டர் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. தகுதியுள்ள பயனாளிகளுக்கு, 25 ஆயிரம் ரூபாய் மானியமாக வழங்கப்படுகிறது.ஆண்டுதோறும் குறிப்பிட்ட எண்ணிக்கையில், உள்ளாட்சி நிர்வாகங்களுக்கு குறிப்பிட்ட இலக்கு வழங்கப்படுகிறது. அதன்படி மட்டுமே, பயனாளிகளை தேர்வு செய்து, அந்தந்த மாவட்ட நிர்வாகத்துக்கு பட்டியல் அனுப்பப்படுகிறது. திருப்பூர் மாவட்டத்தில், முதற்கட்டமாக, ஆயிரம் பயனாளிகளில் துவங்கி, தற்போது, மூவாயிரத்துக்கும் அதிகமான பயனாளிகள், திட்டத்தில் பயன் பெற்றுள்ளனர். 2019-20ம் ஆண்டுக்கான திட்டம் உடுமலை, குடிமங்கலம் ஒன்றியப்பகுதிகளில், அறிவிக்கப்பட்டு, பயனாளிகளின் பட்டியலும் மாவட்ட மகளிர் திட்டத்துக்கு அனுப்பப்பட்டது.இதில் தகுதியுள்ள பயனாளிகளுக்கு அரசு ஒப்புதலும் வழங்கியுள்ளது. 'கொரோனா' பாதிப்புகளை கட்டுப்படுத்த ஊரடங்கு செயல்படுத்தப்பட்டுள்ளதால், பயனாளிகள் மானியத்தொகை பெற முடியாத நிலை ஏற்பட்டது.நேற்று முதல், ஒன்றிய அலுவலகங்கள் வழக்கமாக செயல்பட துவங்கியுள்ளது. அரசின் ஒப்புதல் பெற்ற பயனாளிகள், மானியத்தொகை பெறுவதற்கான ஆவணங்களை ஒன்றிய அலுவலகங்களில் சமர்ப்பிக்கலாம் என மகளிர் திட்ட அலுவலர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், நடப்பு நிதியாண்டு துவங்கியும், 'கொரோனா' பாதிப்பை கட்டுபடுத்த ஊரடங்கு செயல்பாட்டில் இருப்பதால், 2020-21ம் ஆண்டுக்கு, மானிய விலை ஸ்கூட்டர் திட்டத்துக்கு விண்ணப்பிப்பது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X