அர்னாப் கோஸ்வாமியை கைது செய்ய தடை நீட்டிப்பு

Updated : மே 20, 2020 | Added : மே 20, 2020 | கருத்துகள் (8)
Share
Advertisement
SC, Arnab Goswami, supreme court, court news, republic tv

புதுடில்லி : தனியார், செய்தி 'டிவி' சேனல் ஆசிரியர், அர்னாப் கோஸ்வாமிக்கு எதிராக, நாட்டின் பல்வேறு இடங்களில் தொடரப்பட்டுள்ள, எப்.ஐ.ஆர்., எனப்படும் முதல் தகவல் அறிக்கைகளின் மீது நடவடிக்கை எடுக்க விதித்துள்ள தடையை, உச்ச நீதிமன்றம் நீட்டித்துள்ளது.
அதே நேரத்தில், இந்த விவகாரம் தொடர்பாக, சி.பி.ஐ., விசாரணை நடத்த வேண்டும் என்ற, அர்னாபின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.


latest tamil news
மஹாராஷ்டிர மாநிலம் பால்கரில், இரண்டு சாதுக்கள் உட்பட மூன்று பேர், அடித்துக் கொல்லப்பட்டனர். இது தொடர்பாக, 'ரிபப்ளிக்' என்ற தனியார் ஆங்கில செய்தி, 'டிவி' சேனலில் நடந்த விவாதத்தின்போது, காங்., தலைவர் சோனியாவுக்கு எதிராக கருத்து கூறியதாக, அந்த சேனலின் ஆசிரியர், அர்னாப் கோஸ்வாமி மீது குற்றஞ்சாட்டப்பட்டது.


நடவடிக்கை கூடாது


இது தொடர்பாக, மஹாராஷ்டிரா, ராஜஸ்தான், உத்தர பிரதேசம் உட்பட பல மாநிலங்களில், மூன்று, எப்.ஐ.ஆர்., மற்றும் 11 புகார்கள் பதிவு செய்யப்பட்டன.இவற்றை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில், அர்னாப் கோஸ்வாமி வழக்கு தொடர்ந்திருந்தார். அதை, 'வீடியோ கான்பரன்ஸ்' முறையில் விசாரித்த நீதிபதிகள், டி.ஒய்.சந்திரசூட், எம்.ஆர்.ஷா அமர்வு, தன் உத்தரவில் கூறியுள்ளதாவது:
பத்திரிகை சுதந்திரம் என்பது, பேச்சு மற்றும் கருத்தை தெரிவிக்கும் உரிமையின் அடிப்படையில் அமைந்தது. அரசியல் சாசனத்தின்படி, பத்திரிகை சுதந்திரத்திற்கு அதிக முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது.
பேச்சு மற்றும் கருத்தை தெரிவிக்கும் உரிமை அளிக்கப்பட்டால் தான், பத்திரிகை சுதந்திரத்தை நிலைநாட்ட முடியும். அதே நேரத்தில், இந்த சுதந்திரம், கட்டுப்பாடுகளைக் கொண்டது.

அர்னாப் மீது, பல்வேறு மாநிலங்களில் தொடரப்பட்டுள்ள, அவதுாறு புகார்கள் மற்றும் வழக்குகளின் அடிப்படையில் எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது.


கோரிக்கை நிராகரிப்புஅதே நேரத்தில், மஹாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கு மட்டும், மும்பை, எம்.எம்.ஜோஷி மார்க் காவல் நிலையத்துக்கு மாற்ற வேண்டும்.
தன் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக, அந்தக் காவல் நிலையத்தில் அர்னாப் கோஸ்வாமி கொடுத்த புகாருடன் இணைத்து, இதை விசாரிக்க வேண்டும்.
பால்கர் சம்பவம் மற்றும் அதைத் தொடர்ந்து தன் சேனல் வெளியிட்ட செய்தி உள்ளிட்டவற்றை, சி.பி.ஐ., விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கை நிராகரிக்கப்படுகிறது.இவ்வாறு அமர்வு கூறியது.இந்த வழக்கைத் தவிர, மஹாராஷ்டிர மாநிலம் மும்பையில், வெளிமாநிலத் தொழிலாளர்கள், திடீரென போராட்டத்தில் ஈடுபட்டது தொடர்பான செய்தியில், மத நம்பிக்கையை துாண்டும் வகையில் கருத்து கூறியதாக, அர்னாப் மீது, மற்றொரு வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
KavikumarRam - Indian,இந்தியா
20-மே-202012:26:27 IST Report Abuse
KavikumarRam athu ennanga Arnab kku mattum karuthu sudhanthiram kidyaathaa. arugathaye illaatha Kandavanlaam Modiya tharakkuraiva pesuran. Aana Arnab unmaya pesuna mattum yethukku intha naatharinga konthalikkiraanunga.
Rate this:
Cancel
Muruga Vel - Mumbai,இந்தியா
20-மே-202006:07:19 IST Report Abuse
 Muruga Vel Congress after him.
Rate this:
Cancel
blocked user - blocked,மயோட்
20-மே-202005:45:18 IST Report Abuse
blocked user மைனோவின் அடி வருடிகள் மோடியை தரக்குறைவாக விமர்சித்ததற்கு இதே போல பல லட்சம் வழக்குக்களை போட எவ்வளவு நேரம் ஆகும்?
Rate this:
Kumar - Tbilisi,தெற்கு ஜார்ஜியா
20-மே-202011:00:49 IST Report Abuse
KumarModi oru .............
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X