பொது செய்தி

தமிழ்நாடு

விவசாய இணைப்புகளில் கூடுதல் திறன் பெறலாம்! விண்ணப்பிக்க அழைப்பு

Added : மே 20, 2020
Share
Advertisement

திருப்பூர்:'திருப்பூர், மின் பகிர்மான வட்டத்தில், விவசாய மின் இணைப்புகளுக்கு, கூடுதல் எச்.பி., பெற விரும்புவோர் விண்ணப்பிக்கலாம்' எனதெரிவிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் விவசாய பயன்பாட்டுக்கு, சாதாரண மற்றும் சுயநிதி பிரிவின் கீழ், மின் இணைப்பு வழங்கப்படுகிறது. சாதாரண பிரிவில், மின்சாரம் மற்றும் மின்வழித்தட செலவுகள் இலவசம். சுயநிதி பிரிவில், மின் வழித்தட செலவை, விவசாயிகள் ஏற்க வேண்டும். இப்பிரிவில் விரைவாக இணைப்பு வழங்க, 'தட்கல்' திட்டத்தை, மின்வாரியம் செயல்படுத்துகிறது.மின்வாரிய மேற்பார்வை பொறியாளர்ஜவகர் அறிக்கை:விவசாய மின் இணைப்பு பெற்றுள்ள பயனாளிகள் அனைவரும் இத்திட்டத்தில் பயன்பெறலாம். தற்போதுள்ள பளுவையும் சேர்த்து, அதிகபட்சமாக, 15 எச்.பி., பளு கிடைக்குமாறு விண்ணப்பிக்க வேண்டும். தொடர்புடைய டிரான்ஸ்பார்மரில், போதிய மீதித்திறன் இருந்தால் மட்டுமே, விண்ணப்பம் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படும்.ஜூன், 30 வரை, செயற்பொறியாளர் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம். இதற்குண்டான கட்டணம், ஒரு எச்.பி.,க்கு 20 ஆயிரம் ரூபாய். எந்த ஆவணமும் இணைக்க தேவையில்லை. பெயர் மாற்றம் இருந்தால், அதற்குரிய ஆவணம் மற்றும் உரிய கட்டணம் செலுத்த வேண்டும். இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X