பொது செய்தி

தமிழ்நாடு

75 ஆயிரம் முக கவசம் வழங்கல்: பனியன் உற்பத்தியாளர் சேவை

Added : மே 20, 2020
Share
Advertisement
 75 ஆயிரம் முக கவசம் வழங்கல்: பனியன் உற்பத்தியாளர் சேவை

திருப்பூர்:'கோவிட் 19' வைரஸ் பரவாமல் தடுக்க, முககவசம் அணிய வேண்டியது கட்டாயம் என்பதை வலியுறுத்தி, பனியன் உற்பத்தியாளர் ஒருவர், இலவசமாக வினியோகித்து வருகிறார்.ஒவ்வொருவரும், முககவசம் அணிய வேண்டியதன் அவசியத்தை விளக்கும் வகையில், திருப்பூரை சேர்ந்த பனியன் உற்பத்தியாளர் கிருஷ்ணராஜ் 57, கடந்த, 40 நாட்களாக, முக கவசத்தை விலைக்கு வாங்கி, பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கி வருகிறார்.திருப்பூர், வெங்கமேடு பகுதியை சேர்ந்த அவர் கூறியதாவது:பொதுமக்கள், போலீசார், சுகாதார பணியாளர், வடமாநில தொழிலாளருக்கு, 75 ஆயிரம் முககவசங்கள் வழங்கிஉள்ளேன்.முககவசத்தை, மொத்தமாக, விலைக்கு வாங்கி, மளிகை கடை, வங்கி, மார்க்கெட், அரசு அலுவலகங்களில், கூடையில் வைத்துவிடுவேன். தேவையானவர்கள் எடுத்துக்கொள்கின்றனர்.அரசு அறிவுறுத்தியுள்ளதை மக்கள் தவறாமல் பின்பற்ற வேண்டும் என்பதற்காக, இந்த சேவையை செய்து வருகிறேன்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X