பொது செய்தி

தமிழ்நாடு

அவகாசம்! ஊரடங்கு முடியும் வரை அபராதம் இல்லை: பி.எப்., அறிவிப்பால், நிறுவனங்கள் ஆறுதல்

Added : மே 20, 2020
Share
Advertisement

திருப்பூர்:ஊரடங்கு முடியும்வரை, தாமதத்துக்கான அபராதம் விதிப்பில், நிறுவனங்களுக்கு விலக்கு அளிக்கப்படுவதாக, பி.எப்., நிறுவனம் அறிவித்துள்ளது.மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் கீழ், தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி திட்டம் (பி.எப்.,) செயல்படுத்தப்படுகிறது. 20 மற்றும் அதற்கு மேல் தொழிலாளர் பணிபுரியும் நிறுவனங்கள், மாத சம்பளம் 15 ஆயிரத்துக்கு கீழ் பெறும் தொழிலாளர்களை பி.எப்.,ல் இணைக்க வேண்டும்.
ஒவ்வொரு மாதமும் தொழிலாளர் சம்பளத்தில் 12 சதவீதம் பிடித்தம் செய்யப்படுகிறது; இதனுடன் நிறுவன பங்களிப்பு, 12 சதவீதம் சேர்த்து, தொழிலாளர் பி.எப்., கணக்கில் சேர்க்கப்படுகிறது. மாதந்தோறும், 15ம் தேதிக்குள், முந்தைய மாதத்தக்கான பி.எப்., தொகையை செலுத்தவேண்டும். இல்லாவிடில், அபராதம் மற்றும் வட்டி விதிக்கப்படும்.
கொரோனாவால், மார்ச் 24ம் தேதி முதல், நாடுமுழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தொழில் துறை பாதிக்கப்பட்டுள்ளநிலையில், மத்திய அரசு, பி.எப்., பங்களிப்பை, 10 சதவீதமாக குறைத்துள்ளது. அதேபோல், மார்ச், ஏப்., மாதத்துக்கான பி.எப்., செலுத்த, இம்மாதம் 15ம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டது.நான்காவது ஊரடங்கு, வரும் 31ம் தேதி வரை நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், ஊரடங்கு முடியும்வரை, பி.எப்., செலுத்தலாம்; அபராதம், வட்டி எதுவும் செலுத்த தேவையில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து, திருப்பூர் மண்டல பி.எப்., கமிஷனர் விஜய் ஆனந்த் கூறியதாவது:கொரோனா ஊரடங்கால், நிறுவனங்கள் வழக்கமான செயல்பாட்டுக்கு வரமுடியாமலும், உரிய நேரத்தில் பி.எப்., பங்களிப்புகளை செலுத்த முடியாத நிலையில் உள்ளன. இந்த தாமதத்தை, இயல்பு நிலையாக கருதக்கூடாது என்றும், அத்தகைய தாமதத்துக்கு அபராதம் மற்றும் தண்டனை தொகை விதிக்க கூடாது எனவும், பி.எப்., முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து, பி.எப்., இணைய தள முகப்பு பக்கத்திலும், 'கோவிட்-- 19'ன் கீழ் உள்ள வழிமுறைகளில், இதுபோன்ற சூழல்களில், நிறுவனங்கள் மீது எந்த ஒரு சட்ட நடவடிக்கையும் எடுக்க கூடாது. அபராதம் விதிக்க கூடாது என்கிற ஷரத்து இடம்பெற்றுள்ளது. இதன்மூலம், நாடுழுவதும் பி.எப்., ல் பதிவு பெற்ற, 6.5 லட்சம் நிறுவனங்கள், அபராதம் மற்றும் தண்டனை தொகை செலுத்துவதிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X