30 மண்டலங்களில் இயல்பு நிலை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

30 மண்டலங்களில் இயல்பு நிலை

Added : மே 20, 2020
Share
 30 மண்டலங்களில் இயல்பு நிலை

திருப்பூர்:திருப்பூர் மாவட்டத்தில், 32 கொரோனா கட்டுப்பாட்டு மண்டலங்களில், 30 மண்டலங்கள் இயல்பு நிலைக்கு திரும்பிவிட்டன.திருப்பூர் மாவட்டத்தில், திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு, அவிநாசி, பல்லடம், பொங்கலுார், தாராபுரம், உடுமலை பகுதிகளை சேர்ந்த, 114 நபர்களுக்கு, கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. கோவையில் சிகிச்சை அளிக்கப்பட்டு, அனைவரும் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.மாவட்டத்தில் கொரோனா ஒழிக்கப்பட்டாலும், வெளிமாவட்டங்களில் இருந்து மீண்டும் பரவிவிடும் வாய்ப்பு உள்ளது. அதற்காக, மாவட்ட எல்லைகளில், சோதனை சாவடி அமைத்து, முழு பரிசோதனைக்கு பிறகே, வெளிமாவட்டங்களில் இருந்து வருவோர் அனுமதிக்கப்படுகின்றனர்.கொரோனா பாதிக்கப்பட்ட பகுதியில் இருந்து, இரண்டு அல்லது மூன்று கிலோ மீட்டர் சுற்றளவு, கட்டுப்பாட்டு மண்டலமாக அறிவிக்கப்பட்டது. போக்குவரத்து தடை; கடைகள் திறக்க தடை என கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. ஒரு நாள் இடைவெளியில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.மாவட்டத்தில் மொத்தம், 32 கட்டுப்பாட்டு மண்டலங்கள் உருவாக்கப்பட்டன. அவற்றில், 30 இடங்களில் இயல்பு நிலை திரும்பிவிட்டது. இடுவாய் மற்றும் பல்லடம் ஆகிய இரு மண்டலங்கள் மட்டுமே மீதியுள்ளது.கலெக்டர் விஜயகார்த்திகேயன் கூறுகையில்,''மொத்தம், 32 கட்டுப்பாட்டு மண்டலங்கள் உருவாக்கி, கொரோனா விரட்டியடிக்கப்பட்டது. இதுவரை, 30 மண்டலங்கள் இயல்பு நிலைக்கு திரும்பிவிட்டன.திருப்பூர் ஒன்றியத்தில் இடுவாய் ஊராட்சி, பல்லடம் ஒன்றியத்தில், ஆறுமுத்தாம்பாளையம், கரைப்புதுார், 63 வேலம்பாளையம், பூமலுார் ஊராட்சிகள் மட்டும் கட்டுப்பாட்டில் தொடர்கின்றன,'' என்றார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X