சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஊரடங்கு விதிமீறல்: 25 பேர் மீது வழக்கு

Added : மே 20, 2020
Share
Advertisement

அவிநாசி:அவிநாசி, மடத்துப்பாளையம் பகுதியில், இரு நாட்களுக்கு முன், இரு தரப்பினருக்கு இடையே நடந்த மோதலில், சின்னேரிபாளையம் கணேசபுரம் பகுதியை சேர்ந்த கொண்டாள் என்ற பெண்ணை, இளைஞர்கள் தாக்கினர்; அப்பெண் இறந்தார்.நேற்று முன்தினம் மதியம் அவரது சடலம், தகனம் செய்வதற்காக, பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே எரி மயானத்துக்கு எடுத்து வரப்பட்டது. அப்போது, 100க்கும் மேற்பட்டோர் தலித் விடுதலை கட்சி மாநில பொது செயலாளர் செங்கோட்டையன் தலைமையில், ஊர்வலம் நடத்தி, முற்றுகையில் ஈடுபட்டனர்.ஊரடங்கு நேரத்தில், அரசு உத்தரவை மீறி சட்ட விரோதமாக கூடியதாகவும், நோய்த் தொற்று பரவும் அபாயத்தை பொருட்படுத்தாமல் இடைவெளியின்றி மக்களை திரட்டியதாகவும், செங்கோட்டையன், சகுந்தலா உட்பட, 25 பேர் மீது, போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X