அரசியல் செய்தி

தமிழ்நாடு

திருவள்ளூரில் மருத்துவக் கல்லுாரி ரூ.385 கோடியில் கட்ட அடிக்கல்

Added : மே 20, 2020
Share
Advertisement

சென்னை : திருவள்ளூர் மாவட்டத்தில், 385.63 கோடி ரூபாயில் கட்டப்பட உள்ள, அரசு மருத்துவக் கல்லுாரிக்கு, முதல்வர், இ.பி.எஸ்., நேற்று 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக, அடிக்கல் நாட்டினார்.

தமிழகத்தில், ராமநாதபுரம், விருதுநகர், திண்டுக்கல், திருப்பூர், நாமக்கல், நீலகிரி, நாகப்பட்டினம், கிருஷ்ணகிரி, திருவள்ளூர், அரியலுார், கள்ளக்குறிச்சி ஆகிய, 11 மாவட்டங்களில், புதிதாக அரசு மருத்துவக் கல்லுாரிகள் துவங்க, மத்திய அரசு அனுமதி அளித்து உள்ளது. திருவள்ளூர் மாவட்டம், பெரும்பாக்கத்தில் உள்ள, மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில், 150 மாணவர்கள் சேர்க்கையுடன், புதிய அரசு மருத்துவக் கல்லுாரி அமைய உள்ளது.இக்கல்லுாரி அமைய, மத்திய அரசு, 60 சதவீத பங்களிப்பாக, 195 கோடி ரூபாய்; தமிழக அரசு, 190.63 கோடி ரூபாய் வழங்கும். இதற்கு நிர்வாக அனுமதி அளித்தும், முதல் கட்டமாக, 70 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியும், 2019 டிச., 18ல் அரசாணை வெளியிடப்பட்டது.திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லுாரி கட்டடங்கள், 143 கோடி ரூபாய் மதிப்பிலும், மருத்துவமனை கட்டடங்கள், 165.60 கோடி ரூபாய் மதிப்பிலும், குடியிருப்புகள் மற்றும் விடுதி கட்டடங்கள், 77 கோடி ரூபாய் மதிப்பிலும் கட்டப்படும்.புதிய கட்டடங்கள் கட்ட, நேற்று தலைமை செயலகத்தில், முதல்வர், வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக அடிக்கல் நாட்டினார்.இந்நிகழ்ச்சியில், துணை முதல்வர் பன்னீர்செல்வம், சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், தலைமை செயலர் சண்முகம் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X