அரசு பணியாளருக்கான பஸ்கள் போலாம் ரைட்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

அரசு பணியாளருக்கான பஸ்கள் 'போலாம் ரைட்'

Added : மே 20, 2020
Share
 அரசு பணியாளருக்கான  பஸ்கள் 'போலாம் ரைட்'

திருப்பூர்:திருப்பூர் மாவட்டத்தில், அரசு ஊழியருக்கான சிறப்பு பஸ், நேற்று முதல் இயங்க துவங்கியுள்ளது.கலெக்டர் அலுவலகத்தில் பணிபுரியும் அரசு அலுவலர் மற்றும் ஊழியர் வசதிக்காக, சிறப்பு பஸ் இயக்கப்படுகிறது. உடுமலை, அவிநாசி, காங்கயம் மற்றும் தாராபுரம், பெருந்துறை ஆகிய பகுதிகளில் இருந்து, திருப்பூர் கலெக்டர் அலுவலகத்துக்கு சிறப்பு பஸ் இயக்கப்படுகிறது.நேற்று முதல், பஸ் இயக்கம் துவங்கியது. ஒவ்வொரு பஸ்சிலும், 20 பணியாளர் மட்டும் வந்தனர். பஸ்கள் வளாகத்திலேயே நின்றன. மாலை, 6:30 மணிக்கு, கலெக்டர் அலுவலகத்தில் இருந்து, அந்தந்த பகுதிகளுக்கு புறப்பட்டு சென்றது. சிறப்பு பஸ் இயக்கம், போக்குவரத்துக்கு மிகவும் உதவியாக இருப்பதாக, பெண் ஊழியர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.அரசு அறிவுறுத்தியுள்ளபடி, அலுவலர்கள் அனைவரும் சமூக இடைவெளியுடன் பயணித்தனர். கட்டணத்தை அவர்களே செலுத்தினர். மீதியுள்ள இடத்துக்கான கட்டணமாக, 18 சதவீத வரியுடன், 4,720 ரூபாயை, மாவட்ட நிர்வாகம் செலுத்தியது குறிப்பிடத்தக்கது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X