சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கூலி குறைப்பு :கைத்தறியாளர் அதிர்ச்சி

Added : மே 20, 2020
Share
Advertisement

திருப்பூர்:திருப்பூர் மாவட்டத்தில், ஆயிரக்கணக்கான கைத்தறி நெசவாளர்கள் உள்ளனர். இவர்கள் தங்கள் வீடுகளில் கைத்தறிகள் அமைத்து கோரா பட்டு மற்றும் பட்டு சேலை நெசவு செய்கின்றனர்.கொரோனா ஊரடங்கு காரணமாக, 50 நாட்களாக கைத்தறிகள் இயங்கவில்லை. ஊரடங்கு தளர்த்தப்பட்ட நிலையில் கைத்தறி நெசவாளர்கள் தங்கள் உற்பத்தியை ஜவுளி உற்பத்தியாளர்களிடம் கொண்டு செல்ல துவங்கியுள்ளனர். ஏற்கனவே, வழங்கப்படும் கூலியில் சேலைக்கு, 300 ரூபாய் திடீரென குறைக்கப்பட்டுள்ளது.மாவட்ட கைத்தறி நெசவாளர் சங்க பொது செயலாளர் கனகராஜ் கூறியதாவது:ஒப்பந்த கூலியை குறைக்க கூடாது என ஏற்கனவே, தாசில்தார் முன்னிலையில் நடந்த பேச்சின்போது, ஜவுளி உற்பத்தியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.நெருக்கடியான நிலையில், புளியம்பட்டி, சாவக்காட்டுப்பாளையம் பகுதி உற்பத்தியாளர்கள் ஒப்பந்த கூலியை திடீரென குறைத்துள்ளனர்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X