சம்பவம் செய்தி

தமிழ்நாடு

காற்றுக்கு தாங்காத கம்பம்: இரண்டாக முறிந்த அவலம்

Added : மே 20, 2020
Share
Advertisement
 காற்றுக்கு தாங்காத கம்பம்: இரண்டாக முறிந்த அவலம்

பல்லடம்:தரமற்ற மின்கம்பம் ஒன்று, பலத்த காற்றுக்கு ஈடு கொடுக்க முடியாமல், இரண்டாக முறிந்து விழுந்தது.பல்லடம், கோவை - திருச்சி, என்.எச்., ரோடு, அண்ணா நகர் பகுதியில், ரோட்டோரத்தில் இருந்த மின் கம்பம் ஒன்று, நேற்று காலை திடீரென இரண்டாக முறிந்து விழுந்தது.இது குறித்து, அப்பகுதியினர் கூறுகையில், 'குறைந்த அளவு வாகனங்களே சென்று வந்ததாலும், ரோட்டின் இடது புறத்தில் மின் கம்பம் விழுந்ததாலும், விபத்து தவிர்க்கப்பட்டது. மின்கம்பம் விழுந்த இடத்தின் அருகே, பெட்ரோல் பங்க் உள்ளது. அதிர்ஷ்டவசமாக, அசம்பாவிதம் ஏற்படவில்லை,' என்றனர்.மின் கம்பம் முறிந்து விழுந்த தகவல் அறிந்து, சம்பவ இடத்துக்கு வந்த மின் வாரிய ஊழியர்கள், உடைந்த கம்பத்தை அப்புறப்படுத்தி விட்டு, மாற்று மின் கம்பத்தை அமைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X