குளங்களில் மண் எடுக்க, அனுமதிக்க தாமதம்: மண்பாண்டம் செய்வோர், விவசாயிகள் தவிப்பு

Added : மே 20, 2020
Share
Advertisement
 குளங்களில் மண் எடுக்க, அனுமதிக்க தாமதம்: மண்பாண்டம் செய்வோர், விவசாயிகள் தவிப்பு

திருப்பூர்:நீர்நிலைகளில், வண்டல், களிமண் போன்றவற்றை கட்டணம் இன்றி, எடுத்துச்செல்ல அனுமதிப்பதில் தாமதம் ஏற்படுவதாக விவசாயிகள் கூறுகின்றனர்.தமிழகத்தில், ஆண்டுதோறும், குளம் உட்பட நீர்நிலைகளில் இருந்து வண்டல், சவுடு, சரளை, களிமண் போன்றவற்றை, விவசாயிகள் கட்டணமின்றி எடுத்துச்செல்ல அனுமதி வழங்கப்படுகிறது. மழைக்காலத்துக்கு முன்பே, இதற்கான அனுமதி வழங்கப்படும். இதற்காக, அந்தந்தத் தாலுகா அலுவலகங்களில், சிறப்பு முகாம்களும் நடத்தப்பட்டு வந்தன.ஊரடங்கு நீடிக்கும் நிலையில், இதற்கான அனுமதி கிடைக்காததால், விவசாயிகள் தவிக்கின்றனர்.விவசாயிகள் கூறியதாவது:வண்டல், களிமண் போன்றவற்றை எடுத்துச்செல்ல, பொதுப்பணித்துறை சார்பில், அறிவிக்கப்பட்டு விட்டது. இருப்பினும், விவசாயிகள், தாங்கள் வசிக்கும் கிராமங்கள் மற்றும் அருகில் உள்ள கிராம நீர்நிலைகளில் இருந்து எடுத்துச்செல்ல, வருவாய்த்துறையினர் அனுமதி கிடைக்கவில்லை.வருவாய்த்துறையினரிடம் கேட்டால், இன்னும் தங்களுக்கு, இதுதொடர்பான அனுமதி கிடைக்கப்பெறவில்லை என்று கூறுகின்றனர். ஊரடங்கு தொடர்ந்தாலும், விவசாயப்பணிக்குத் தடைவிதிக்கப்படவில்லை.மழைக்காலத்துக்கு முன்பே, மண்ணை நிலங்களில் பரப்பிச் சீர்படுத்திவிடுவோம். மண் எடுக்க, உடனடியாக அனுமதி வழங்கப்பட வேண்டும்.இவ்வாறு, விவசாயிகள் கூறினர்.''மண்பாண்டங்கள் செய்வதற்கும், களிமண்ணை அனுமதி பெற்று இலவசமாக எடுத்துச்செல்ல முடியும். அனுமதி தராததால், தவிக்கிறோம்'' என்று மண்பாண்டத் தொழிலாளர்கள் கூறுகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X