பொது செய்தி

தமிழ்நாடு

ரயிலில் கூடுதல் பயணி ரயில்வே சிறப்பு அனுமதி

Added : மே 20, 2020
Share
Advertisement

திருப்பூர்:'புலம் பெயர்ந்த தொழிலாளர்களை அழைத்து செல்லும் சிறப்பு ரயிலில், கூடுதலாக பயணிகள் ஏற்றிக் கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது.திருப்பூரில் இருந்து இதுவரை ஆறு ரயில்களில், மொத்தம், 8,136 பேர் வட மாநிலம் சென்றுள்ளனர். நேற்று காலை, 11:00 மணிக்கு பீகார், சிட்மர்ஹி பகுதிக்கு ஒரு ரயில் இயக்கப்பட்டது. இதில், 1,464 பேர் பயணித்தனர். இந்த ரயிலில் ஒரு பெட்டிக்கு, 72 பேர் அனுமதிக்கப்பட்டனர்.இதனால், ஜார்கண்ட் சிறப்பு ரயிலில் பயணிகள் எண்ணிக்கை, 1,600 ஆக அதிகரித்திருந்தது. 'இனி இயக்கப்படும் ரயில்களில் மேற்கண்ட அளவு பயணிகள் ஏற்றப்படுவர்,' என, ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.இதுவரை, திருப்பூரில் இருந்து பீகாருக்கு ஐந்து, உ.பி., ஒடிசா, ஜார்கண்ட்டுக்கு தலா ஒரு ரயில் என மொத்தம், எட்டு ரயில்கள் இயக்கப்பட்டுள்ளன. 11,200 புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் அவரவர் சொந்த மாநிலத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X