சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஆர்.ஐ., ஆபீஸ் எதிரில் மரம் வெட்டி சாய்ப்பு

Added : மே 20, 2020
Share
Advertisement
 ஆர்.ஐ., ஆபீஸ் எதிரில் மரம் வெட்டி சாய்ப்பு

திருப்பூர்:திருப்பூரில், ஆர்.ஐ., அலுவலகம் எதிரில், அனுமதி பெறாமல், பழமையான வேப்ப மரத்தின், 80 சதவீத கிளைகள் வெட்டப்பட்டன.திருப்பூர், பெருமாள் கோவில் அருகிலுள்ள அரிசி கடை வீதியில், ஏறத்தாழ, 60 ஆண்டுகளை கடந்த பழமையான மரங்கள் உள்ளது. அதில், ஆர்.ஐ., அலுவலகத்துக்கு எதிரிலுள்ள வேப்ப மரத்தின் கிளைகளை, அப்பகுதியை சேர்ந்த ஒருவர் நேற்று மாலை, 4:30 மணியளவில் வெட்டி சாய்த்தார்.இது குறித்து, அவ்வழியே சென்ற பசுமை ஆர்வலர்கள் சிலர் கேட்டதற்கு, 'வீடு மற்றும்மின் ஒயர்கள் மீது மரக்கிளைகள் படுவதால் வெட்டினோம். இதனை ஆர்.ஐ., பார்த்து சென்றார்,' என்றார். என்னதான், பிரச்னை என்றாலும், பசுமையான மரத்தை வெட்டுவதற்கு, வருவாய்த்துறையினரிடம் அனுமதி பெற வேண்டும்.ஆனால், அனுமதி பெறாமல், அதுவும், ஒரு அரசு அலுவலகம் எதிரிலேயே, இவ்வாறு, மரத்தை வெட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X