பொது செய்தி

தமிழ்நாடு

'முக கவசம் அணியாவிட்டால் பொருள் கொடுக்க மாட்டோம்':வியாபாரிகள் எச்சரிக்கை

Added : மே 20, 2020
Share
Advertisement
 'முக கவசம் அணியாவிட்டால்  பொருள் கொடுக்க மாட்டோம்':வியாபாரிகள் எச்சரிக்கை

திருப்பூர்:பொதுமக்கள் அதிகம் வந்து செல்வதால், மளிகை கடைகள் முன், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டுமென, வியாபாரிகள் சங்கம் எச்சரிக்கை அறிவிப்பு வைத்துள்ளது.வெளிமாவட்ட மக்கள், திருப்பூருக்கு வந்து கொண்டே இருப்பதால், மீண்டும் கொரோனா வந்துசேரவும் வாய்ப்புள்ளது. எனவே, ஊரடங்கு தளர்வில் தான் மக்கள் மேலும் விழிப்பாக இருக்க வேண்டும். முககவசம் அணியாமல், யாரும் வீட்டில் இருந்து வெளியே வரக்கூடாது.எத்தகைய சூழலிலும், சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும்; மாறாக, கூட்டம் சேர்ந்து கும்மாலமடித்தால், கொரோனாவின் கோரப்பிடியில் சிக்க நேரிடும். பொதுமக்களுக்கு, சரியான விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியது, வியாபாரிகளுக்கும் கடமையாகிறது.மளிகை கடை உரிமையாளர்கள் கூறுகையில், 'பல்வேறு பகுதிகளை சேர்ந்த மக்களும், மளிகை கடைக்கு வந்து செல்கின்றனர். எப்போதும், ஐந்து நபருக்கு மேல் கூடக்கூடாது; கட்டாயம், முககவசம் அணிந்து வர வேண்டும். சமூக இடைவெளியுடன், நின்று பொருட்களை வாங்கிச்செல்ல வேண்டும். பொது இடத்தில் எச்சில் துப்பக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. முககவசம் அணியாமல் வந்தால், பொருட்கள் வழங்கப்பட மாட்டாது என்றும் அறிவிப்பு செய்துள்ளோம்,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X