17 வயது சிறுமிக்கு குழந்தை: பீகார் வாலிபருக்கு வலை| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

17 வயது சிறுமிக்கு குழந்தை: பீகார் வாலிபருக்கு வலை

Added : மே 20, 2020
Share

திருப்பூர்:அசாம் மாநிலத்தை சேர்ந்த 17 வயது சிறுமி. குடும்பத்துடன் வால்பாறையில் தங்கி வேலை செய்து வந்தனர்.கடந்த ஆண்டு சிறுமி திருப்பூரில் தங்கி பனியன் நிறுவனத்துக்கு சென்று வந்தார். அப்போது, பீகார் மாநிலத்தை சேர்ந்தரஞ்சித் மண்டல் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.கடந்த 2019 ம் ஆண்டு ஜன., மாதம் இருவரும் திருமணம் செய்து, வாழ்ந்து வந்தனர். 30ம் தேதி கோவை அரசு மருத்துவமனையில் சிறுமிக்கு குழந்தை பிறந்தது. இதுதொடர்பாக டாக்டர்கள் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.திருப்பூர் வடக்கு அனைத்து மகளிர் போலீசார் விசாரித்தனர். அதில், ரஞ்சித் மண்டலை திருமணம் செய்து வாழ்ந்ததும், ஊரடங்குக்கு முன், பீகார் சென்றவர், பின் திரும்பவில்லை.வாலிபரை குறித்து வேறு எந்த விபரமும்சிறுமிக்கு தெரியவில்லை. அவர் மீது 'போக்சோ' பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து, போலீசார் தேடி வரு கின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X