தமிழ்நாடு

போதும்டா சாமி! ஏனோ சிலர் 'மாஸ்க்' அணிவதில்லை: மீண்டும் வேண்டாமே தொல்லை!

Updated : மே 20, 2020 | Added : மே 20, 2020
Share
Advertisement
 போதும்டா சாமி! ஏனோ சிலர் 'மாஸ்க்' அணிவதில்லை: மீண்டும் வேண்டாமே தொல்லை!

கோவை:'கொரோனா' நோய் தொற்று இல்லை என அறிவிக்கப்பட்டதால், பொதுமக்களிடம் பயம் போய் விட்டது. மாஸ்க் அணிவது குறைந்து விட்டது. மாவட்ட எல்லை சோதனைச்சாவடிகளிலும், கண்காணிப்பு குறைந்து விட்டது. மீண்டும் நோய் பரவி விடாமல் தடுக்க, பொதுமக்கள் அனைவரும் தொடர்ந்து, அரசின் விதிமுறைகளை பின்பற்ற வேண்டும்.'கொரோனா' வைரஸ் பரவல், கோவையில் கட்டுக்குள் இருப்பதால், ஊரடங்கில் தளர்வு அளிக்கப்பட்டு இருக்கிறது.
அனுமதிக்கப்பட்ட வர்த்தக நிறுவனங்கள் செயல்பட துவங்கியுள்ளன. 50 சதவீத அலுவலர்களுடன், அரசு துறை அலுவலகங்கள் செயல்படுகின்றன.நோய் பரவாமல் இருக்க, சுகாதாரப் பிரிவினர், கண்காணிப்பு பணியில் தொடர்ந்து ஈடுபட அறிவுறுத்தப்பட் டுள்ளனர்.காற்றில் பறந்த விதிமுறைகள்வர்த்தக நிறுவனங்களுக்கு வரும் வாடிக்கையாளர்கள், காய்கறி மற்றும் இறைச்சி மார்க்கெட்டுகளுக்கு வரும் மக்கள், சமூக இடைவெளியை பின்பற்றுவதில்லை.
நோய் தொற்று இல்லை என அறிவிக்கப்பட்டதால், முக கவசம் அணிவதையும் சிலர் தவிர்த்து வருகின்றனர்.அதனால், விதிமுறைகள் பின்பற்றப்படுகிறதா என கண்காணிக்க, மாநகராட்சி தெற்கு மண்டல உதவி கமிஷனர் ரவி, மத்திய மண்டல உதவி கமிஷனர் மகேஷ் கனகராஜ் ஆகியோருக்கு, அறிவுரை வழங்கப்பட்டு உள்ளது.பழைய உஷார் இப்ப இல்லைபிற மாவட்டங்களில் இருந்து வருவோர் மூலமாக, நோய் பாதிப்பு ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக, மாவட்ட எல்லை பகுதியில், 11 இடங்களில் சோதனைச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது.
வருவாய்த்துறை, சுகாதாரத்துறை, காவல்துறையினர் தொடர்ந்து கண்காணிக்க, மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டிருக்கிறது. மாவட்ட எல்லைகளில், மூன்று 'ஷிப்ட்'களில் காவல்துறை மற்றும் சுகாதாரத்துறையினர் பணியில் இருந்தாலும், கண்காணிப்பை தளர்த்தி விட்டனர். வெளிமாவட்டங்களில் இருந்து வருவோர், 'இ-பாஸ்' வைத்திருக்கின்றனரா, எதற்காக செல்கின்றனர் என்கிற விவரம் கூட கேட்பதில்லை.
ஆபத்து இன்னும் நீங்கவில்லைநோய் தொற்று, சென்னையை போல் சமூக பரவலாகி விட்டால், பரிசோதனை செய்து, சிகிச்சை அளிக்க முடியாத சிக்கல் ஏற்படும். ஆகவே, மாவட்ட எல்லைகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும். ஆபத்து இன்னும் முழுமையாக அகலவில்லை என்பதை உணர்ந்து, அனைவரும் அரசின் விதிமுறைகளை, தொடர்ந்து பின்பற்ற வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X