சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மில் தொழிலாளர்கள் போராட்டம்

Added : மே 20, 2020
Share
Advertisement

சூலூர்: சூலூர் திருச்சி ரோட்டில், தனியார் ஸ்பின்னிங் மில் உள்ளது. ஊரடங்கால் இயங்காமல் இருந்தது. இந்நிலையில், மில் கேட் அருகே, நுாற்றுக்கணக்கான தொழிலாளர்கள் நிலுவை சம்பளத்தை வழங்க கோரி, போராட்டம் நடத்த முயன்றனர். ஊரடங்கு அமலில் உள்ளதால், போராட அனுமதியில்லை என சூலுார் போலீசார் கூறினர்.
இதையடுத்து, நான்கு பேர் மட்டும் பேச்சுவார்த்தை நடத்த சென்றனர். மற்றவர்கள் கலைந்து சென்றனர்.ஆனைகட்டியில் நிவாரண உதவிஆனைகட்டி: ஆனைகட்டி மற்றும் அதை சுற்றியுள்ள, மலை கிராமங்களில் வசிக்கும் பழங்குடியினர் மற்றும் ஏழை, எளிய குடும்பங்களுக்கு அரிசி, பருப்பு, காய்கறி உள்ளிட்ட மளிகைப் பொருட்களை, கவுண்டம்பாளையம் எம்.எல்.ஏ., ஆறுகுட்டி வழங்கினார்.நஞ்சுண்டாபுரத்தில் புது ஆழ்குழாய் கிணறுநஞ்சுண்டாபுரம்: வரப்பாளையம் அரசுப்பள்ளி அருகே உள்ள, ஆழ்குழாய் கிணற்றில் பழுதான மோட்டார் அகற்றப்பட்டு, புதிய மோட்டார் பொருத்தப்பட்டது. பொதுமக்களுக்கு தண்ணீர் வினியோகம் செய்யும் பணி நடந்தது.
ஏற்பாடுகளை, நஞ்சுண்டாபுரம் ஊராட்சி தலைவர் கார்த்திகேஸ்வரி சுந்தரராஜ் செய்திருந்தார்.காங்கிரஸ் நிவாரண உதவிதுடியலூர்: மேட்டுப்பாளையம் ரோடு கவுண்டர் மில்ஸ் பிரிவில், காங்., செயல் தலைவர் மயூரா ஜெயக்குமார், பச்சை முத்து ஆகியோர் ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்ட ஏழை, எளிய மக்கள், 300 பேருக்கு தலா, 5 கிலோ அரிசி, பருப்பு, காய்கறி உள்ளிட்ட மளிகைப் பொருட்களை வழங்கினர். கட்சியின் மாவட்ட செயலாளர் காதர், சுரேந்திர பாபு, சிங்காரவேலு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.கொரோனா எதிர்க்க ஹோமியோபதிநரசிம்மநாயக்கன்பாளையம்: நரசிம்மநாயக்கன்பாளையம் அ.தி.மு.க., சார்பில், 5ம் கட்டமாக பேரூராட்சிக்கு உட்பட்ட ராஜேந்திரா நகர், சீனிவாசா நகர் மற்றும் பழையூர் பகுதிகளில், நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில், வைரஸை எதிர்க்கும் ஹோமியோபதி மாத்திரைகளை லீமாரோஸ் மார்ட்டின் மற்றும் நரசிம்மநாயக்கன்பாளையம் பேரூராட்சி முன்னாள் தலைவர் ஆனந்தன் ஆகியோர் வழங்கினர்.
நெற்பவள மணி மாலைவெள்ளலுார்: வெள்ளலுார் குளக்கரையில் அமைக்கப்பட்டுள்ள, மூலிகை வனத்தில் இருந்து நெற்பவள மணிகள் சேகரித்து, மாலை தொடுக்கும் பணியில், குளங்கள் பாதுகாப்பு அமைப்பினர் ஈடுபட்டு வருகின்றனர்.துாய்மை பணியாளர்களுக்கு பிரியாணிநரசிம்மநாயக்கன்பாளையம்: நரசிம்மநாயக்கன்பாளையம் பேரூராட்சியில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கு, பா.ஜ., மற்றும் பொதுமக்கள் இணைந்து கடந்த, 50 நாட்களாக மதிய உணவு அளித்து வந்தனர்.
ஐம்பதாவது நாளன்று சிக்கன் பிரியாணி மதிய உணவாக வழங்கப்பட்டது. பா.ஜ., மாவட்ட செயலாளர் விவேகானந்தன், நரசிம்மநாயக்கன்பாளையம் நிர்வாகிகள் வேணுகோபால், யோகேஷ் கலந்து கொண்டனர்.அப்பநாயக்கன்பாளையத்தில் ஆசிரியர்கள் உதவிதுடியலூர்: பெரியநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, அப்பநாயக்கன் பாளையம் பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் இணைந்து, 120 மாணவ, மாணவியர் குடும்பங்களுக்கு தலா, 600 ரூபாய் மதிப்பிலான மளிகை மற்றும் காய்கறி வழங்கினர். வட்டார கல்வி அலுவலர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X