நெசவாளர் காலனியில் நடந்தால் வாய்பிளந்து காத்திருக்கிறது பாதாள சாக்கடை கால்வாய்

Added : மே 20, 2020
Share
Advertisement

சாக்கடை கால்வாய் அடைப்புமாநகராட்சி, 40வது வார்டுக்கு உட்பட்ட, கணபதி, எப்.சி.ஐ.,காலனி அருகில் உள்ள, தென்றல் நகரில், சாக்கடை கால்வாய் அடைப்பால், கழிவுநீர் தேங்கி, சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.- நடராஜன், தென்றல் நகர்.

பாதாள சாக்கடை சிலாப் உடைப்புபாப்பநாயக்கன்பாளையம், நேதாஜி ரோட்டில், பாதாள சாக்கடைக்காக அமைக்கப்பட்ட சிலாப் உடைந்து, சாலையில் பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது. நடந்து செல்வோர் தவறி விழுந்து விபத்துக்குள்ளாகும் முன், சரி செய்ய வேண்டும்.- ராகேஷ், நேதாஜி ரோடு.

குப்பை தொட்டியை மாற்றணும்ேஹாப்ஸ் - சிங்காநல்லுார், காமராஜர் ரோடு, இ.எஸ்.ஐ., மருத்துவமனை அருகில், சாலையை ஆக்கிரமித்து வைக்கப்பட்டுள்ள, குப்பை தொட்டியால், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. இத்தொட்டியை இடம் மாற்றி வைக்க வேண்டும்.- ஜெகன், வரதராஜபுரம்.

விபத்து அபாயம்ஒண்டிப்புதுார், நெசவாளர் காலனி, பிரதான சாலையில், பாதாள சாக்கடை கால்வாய்க்கு, மூடி இல்லை. சாலை திருப்பத்தில் உள்ள இந்த குழியில், வாகனங்களில் செல்வோர் மற்றும் நடந்து செல்வோர் விழுந்து, விபத்துக்குள்ளாகும் அபாயம் உள்ளது.- வெங்கடாசலம், சோமனுார்.

குப்பை அள்ளுவதில்லைமேட்டுப்பாளையம், தேக்கம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட, தொட்டதாசனுாரில், குப்பை முறையாக அள்ளப்படுவதில்லை; சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.- அருண், தொட்டதாசனுார்.

நீர் வழித்தடம் அடைப்புசிங்காநல்லுார் - வெள்ளலுார் ரோடு, மேம்பாலத்தின் கீழ் உள்ள, வாய்க்கால் முழுவதும் குப்பை கொட்டப்பட்டுள்ளது. இக்குப்பைகளை அப்புறப்படுத்தி, மழைநீர் செல்ல, வழி ஏற்படுத்த வேண்டும்.-சூர்யா, வெள்ளலுார்.

துாய்மை பணியாளர்கள் வருவதில்லைமேட்டுப்பாளையம் ரோடு, சேரன் நகர் எதிரில் உள்ள, வெங்கடசாமி வீதி, ரயில்வே மென்ஸ் காலனிக்கு, துாய்மை பணியாளர்கள் வராததால், சாக்கடை கால்வாய் அடைப்பு, குப்பை குவியல் என, இப்பகுதி முழுவதும் அசுத்தமாக உள்ளது.- பத்மநாபன், வெங்கடசாமி வீதி.

அறிவிப்பு பலகையாவது வையுங்கஆர்.எஸ்.புரம், கிழக்கு பொன்னுரங்கம் ரோடு - டி.பி.ரோடு, சந்திப்பில், சாலையோரம் உள்ள குழியால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இங்கு குழி இருப்பதை தெரிவிக்கும் வகையில், அறிவிப்பு பலகையாவது வைக்க வேண்டும்.- ரவிசங்கர், விளாங்குறிச்சி.

இப்ப விழுமோ? எப்ப விழுமோ?மாநகராட்சி, 47வது வார்டுக்கு உட்பட்ட, பீளமேடு, காந்திமாநகர் போலீஸ் ஸ்டேஷனில் இருந்து, கவுதமபுரி செல்லும் சாலையில் உள்ள, மின் கம்பங்கள் சாய்ந்து விழும் நிலையில் உள்ளன. இக்கம்பங்கள் விழுந்து மின் விபத்து ஏற்படும் முன், இவற்றை சீராக்க வேண்டும்.- பாஸ்கரன், பீளமேடு.

விளக்குகள் எரிவதில்லைமாநகராட்சி, 70வது வார்டுக்கு உட்பட்ட, சவுரிபாளையம் ரோடு, புலியகுளம், கருப்பராயன் கோவில் வீதியில் உள்ள, மின் கம்பங்களில், கடந்த இரு மாதங்களாக விளக்குகள் எரிவதில்லை.- சந்திரன், கருப்பராயன் கோவில் வீதி.

இருளில் தவிக்குது ராமசாமி நகர்நல்லாம்பாளையம், ராமசாமி நகர் 2வது வீதியில் உள்ள, மின் கம்பத்தில்(எண்: 511), கடந்த சில மாதங்களாக, விளக்கு எரிவதில்லை.- ஜெயகுமார், ராமசாமி நகர்.

பிருந்தாவன் லே-அவுட்டில் இருட்டுசொக்கம்புதுார், பிருந்தாவன் லே-அவட்டில் உள்ள, மின் கம்பத்தில்(எண்: 447) கடந்த மூன்று மாதமாக விளக்கு எரிவதில்லை. மின் வாரியத்தில் பலமுறை தெரிவித்தும் நடவடிக்கை இல்லை.- சுந்தரராஜன், பிருந்தாவன் லே-அவுட்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X